மதுரையை சேர்ந்த நாகராஜன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், "மதுரை மாநகராட்சியின் முக்கிய நீராதாரமாக வைகை ஆறு உள்ளது. இந்த ஆற்றின் கரையோரம் குப்பைகள், கட்டுமான கழிவுகள் டன் கணக்கில் கொட்டப்பட்டுள்ளன. இதனால் வைகை ஆற்றில் மாசு அதிகரித்துள்ளது. ஆகவே, வைகை ஆற்றை பாதுகாக்கும் வகையில், ஆற்றுக்குள் கழிவுப் பொருள்களை கொட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவர்களிடமிருந்து இழப்பீட்டு தொகை வசூலிக்கப்படவேண்டும். குறிப்பாக ஆற்றுக்குள் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுத்து, தேவையான இடங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க வேண்டும். அதோடு ஆற்றுக்குள் சாக்கடை மற்றும் கழிவு நீரை கலப்போர் மீது கைது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனுவை இன்று (மே 6) விசாரித்த நீதிபதிகள் டி.ராஜா, பரதசக்கரவர்த்தி இருவரும், இதுகுறித்து தமிழ்நாடு அரசுத் தரப்பில் உரிய விளக்கமளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தனர்.
இதையும் படிங்க: பட்டாசு ஆலை வெடிவிபத்து... தொடர்புடையவர்களுக்கு கருணை காட்ட முடியாது... நீதிமன்றம்