விருதுநகர் மாவட்ட குவாரி உரிமையாளர் நலச்சங்க செயலர் நாராயண பெருமாள் சாமி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் "தமிழ்நாட்டில் குவாரிகளை லீசுக்கு எடுக்கும்போது, சம்பந்தப்பட்ட கிராம பஞ்சாயத்திற்கும், மாவட்ட கனிம வளத்துறைக்கும் வரி செலுத்தப்படுகிறது.
அப்படி செலுத்தப்படும் வரியில் ஒரு கிராமத்தின் அடிப்படை தேவைகளையே பூர்த்தி செய்து கொள்ளலாம். ஆனால், அவ்வாறு வரித்தொகை பயன்படுத்தப்படுவதில்லை. இந்த நிலையில், கூடுதலாக பசுமை நிதி எனும் பெயரில் வரி வசூலிக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுமிகவும் மிகவும் சிரமத்தை ஏற்படுத்தும்.
இந்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், விஜயகுமார் அமர்வில் இன்று (ஏப். 11) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இதுகுறித்து தமிழ்நாடு அரசு தொழில்துறை கூடுதல் தலைமைச் செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: கூடுதல் மருத்துவக்கட்டணம் வசூலிப்பு... தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலர் பதிலளிக்க உத்தரவு...