ETV Bharat / city

குத்தகை நிலுவையை செலுத்த பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத்துக்கு உத்தரவு - poompuhar shipping corporation land acquisition

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத்தொகையை பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் ஒரு மாதத்திற்குள் செலுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

madurai-hc
madurai-hc
author img

By

Published : Mar 31, 2022, 7:27 AM IST

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் பகவதி அம்மன் கோயிலுக்கு சொந்தமான 12,431 சதுர அடி இடத்தில் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத்தின் படகு கிளப் செயல்பட்டுவருகிறது.

இந்த இடத்திற்காக கப்பல் போக்குவரத்துக் கழகம், 1984ஆம் ஆண்டு முதல் கோயில் நிர்வாரத்திற்கு குத்தகை தொகை செலுத்தி வந்த நிலையில், சமீபகாலமாக உரிய குத்தகை தொகையை செலுத்தவில்லை. அந்த வகையில் கோடிக்கணக்கான ரூபாய் நிலுவையில் உள்ளது. இதனிடையே கோயில் நிர்வாகம் உரிய வருமானம் இன்றி, செலவுகளை சமாளிக்க முடியாத நிலையில் உள்ளது.

எனவே கோயிலுக்கு சொந்தமான இடத்தை, கப்பல் நிறுவனத்திடம் இருந்து மீட்டு, குத்தகை நிலுவைத்தொகையை செலுத்தும்படி உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கை நேற்று (மார்ச் 30) விசாரித்த நீதிபதி சரவணன், பகவதி அம்மன் கோயிலுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத்தொகையை ஒரு மாதத்தில் பூம்புகார் கப்பல் நிறுவனம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: நகர்ப்புற பாஜக தலைவர் தாக்கப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.