ETV Bharat / city

அரசுப்பணி தேர்வு - உயர் நீதிமன்றக்கிளை கேள்வி! - உயர் நீதிமன்றக்கிளை கேள்வி

மதுரை: அரசுப் பணிகளில் தமிழ் வழியில் பயின்றதற்கான இட ஒதுக்கீட்டின் கீழ் எதன் அடிப்படையில் நபர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர் என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

hc
hc
author img

By

Published : Dec 1, 2020, 7:53 PM IST

மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த சக்தி ராவ் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில், " கடந்த 2019 ஜனவரி 1 இல், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட 181 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுத்தது. அதற்கு விண்ணப்பித்து, முதல்நிலைத் தேர்வு, எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றபின், நேர்முகத் தேர்வு பட்டியலில் எனது பெயர் இடம்பெறவில்லை.

விதிப்படி தமிழ் வழியில் கல்வி பயின்றவருக்கு 20% இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டுள்ளது. ஆனால், அதன்படியும் நான் தேர்வு செய்யப்படவில்லை. இதுகுறித்து விசாரித்தபோது தமிழ்வழியில் கல்வி பயின்றதற்கான இட ஒதுக்கீட்டு சலுகை, தொலைநிலை கல்வியில் பயின்றவருக்கும் வழங்கப்பட்டிருப்பது தெரியவந்தது. தொலைநிலைக் கல்வி பயின்றவர்களுக்கு தமிழ் வழியில் பயின்றதற்கான இட ஒதுக்கீடு வழங்குவது பொருத்தமாக இருக்காது.

இது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழும் எவ்வித தகவலையும் வழங்கவில்லை. ஆகவே தமிழ் வழியில் பயின்றோருக்கான இட ஒதுக்கீட்டை முறைப்படுத்த உத்தரவிட வேண்டும் " எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு, முன்பாக விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில், " தமிழ் மொழியில் பயின்றவர்களுக்கான இட ஒதுக்கீட்டை முறைப்படுத்துவது தொடர்பான சட்டத் திருத்த மசோதா கடந்த மார்ச் மாதம் கொண்டுவரப்பட்டது. அது ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருப்பில் உள்ளது " எனத் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதிகள், " தமிழ் வழியில் பயின்றதற்கான இட ஒதுக்கீட்டின் கீழ் எதன் அடிப்படையில் நபர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்? கடந்த 5 ஆண்டுகளாக தமிழ் வழியில் பயின்றதற்கான இட ஒதுக்கீடு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்களின் விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: பொதிகை தொலைக்காட்சியில் சமஸ்கிருத மொழி ஒளிபரப்புக்கு தடை விதிக்கக் கோரி முறையீடு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.