ETV Bharat / city

லாக்-அப்பில் இளைஞர் கொலை? - சிசிடிவி பதிவை பாதுகாக்க நீதிமன்றம் உத்தரவு

மதுரை: காவல் துறையினர் தாக்கியதில் ஓட்டுநர் மரணம் அடைந்ததாகக் கூறப்படும் வழக்கை விசாரித்த நீதிமன்றம், காவல் நிலைய சிசிடிவி பதிவுகளைப் பாதுகாக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும் அந்த இளைஞரின் உடற்கூறாய்வை காணொலியில் பதிவு செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

Madurai Lock up death
author img

By

Published : Oct 25, 2019, 10:00 PM IST

மதுரை சோலை அழகுபுரத்தைச் சேர்ந்த முத்துகருப்பன், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில்,"என் மகன் பாலமுருகன் ஓட்டுநராகப் பணிபுரிந்தார். கடத்தல் வழக்கில் பாலமுருகனை அவனியாபுரம் காவலர்கள் கைது செய்தனர். முன்னதாக பாலமுருகனை அவர்கள் சட்டவிரோதமாகக் காவலில் வைத்து கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதனால் பலத்த காயமடைந்த பாலமுருகனை மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இது குறித்து தகவல் தெரிந்து நாங்கள் சென்று பார்த்தபோது அவசர சிகிச்சைப் பிரிவில் சுயநினைவு இல்லாமலிருந்தார். அவனியாபுரம் காவல் ஆய்வாளர் ரமணி, சார்பு ஆய்வாளர் சக்தி மணிகண்டன், அண்ணாநகர் காவல் நிலைய சிறப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் பெத்துராஜ், காவல் ஆய்வாளர்கள் என் மகனை சட்டவிரோதமாகக் காவலில் வைத்து கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

இது தொடர்பாக மாவட்ட நீதிபதிக்கு புகார் அனுப்பினேன். அவர் உத்தரவின் பேரில் 2018 அக்டோபர் 24இல் ஐந்தாவது நீதித்துறை நடுவர் அரசு மருத்துவமனைக்குச் சென்று விசாரித்தனர். மாலையில் பாலமுருகன் சிகிச்சைப் பலனளிக்காமல் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். என் மகன் உடற்கூறாய்வை தடயவியல் துறையைச் சேர்ந்த இரு பேராசிரியர்கள் முன்னிலையில் மேற்கொள்ளவும், அதனை காணொலியில் பதிவு செய்யவும், சம்பவம் தொடர்பாக தலைமை குற்றவியல் நடுவர் விசாரிக்கவும், உரிய இழப்பீடு வழங்கவும், அவனியாபுரம் காவல் நிலையத்தின் அக்டோபர் 20 முதல் அக்டோபர் 22 வரையிலான சிசிடிவி கேமரா பதிவுகளைப் பாதுகாக்கவும், காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன், அவனியாபுரம் காவல் நிலையத்தின் அக்டோபர் 20 முதல் அக்டோபர் 22 வரையிலான சிசிடிவி பதிவுகளைப் பாதுகாக்க வேண்டும். உடற்கூறாய்வு காணொலியில் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். இந்த வழக்கு வருகிற ஒன்றாம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

இதையும் படிங்க: இப்படியும் ஓர் காதல்... கணவன் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழப்பு!

Intro:சட்டவிரோதமாக காவலில் வைத்து தாக்கிய வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளை பரபரப்பு உத்தரவு

சட்டவிரோதமாக காவலில் வைத்து கடுமையாக தாக்கியதில் உயிரிழந்த பாலமுருகன் என்பவருக்கு உரிய இழப்பீடு வழங்கவும், போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில் அவனியாபுரம் காவல் நிலையத்தின் 20.10.2019 முதல் 22.10.2019 வரையிலான சிசிடிவி பதிவுகளை பாதுகாக்க வேண்டும். பிரேத பரிசோதனையை வீடியோவில் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.Body:சட்டவிரோதமாக காவலில் வைத்து தாக்கிய வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளை பரபரப்பு உத்தரவு

சட்டவிரோதமாக காவலில் வைத்து கடுமையாக தாக்கியதில் உயிரிழந்த பாலமுருகன் என்பவருக்கு உரிய இழப்பீடு வழங்கவும், போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில் அவனியாபுரம் காவல் நிலையத்தின் 20.10.2019 முதல் 22.10.2019 வரையிலான சிசிடிவி பதிவுகளை பாதுகாக்க வேண்டும். பிரேத பரிசோதனையை வீடியோவில் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

மதுரை சோலை அழகுபுரத்தைச் சேர்ந்த முத்துகருப்பன், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.அதில்,"என் மகன் பாலமுருகன் ஓட்டுனராக பணிபுரிந்தார். கடத்தல் வழக்கில் பாலமுருகனை அவனியாபுரம் போலீஸார் கைது செய்தனர். முன்னதாக பாலமுருகனை போலீஸார் சட்டவிரோதமாக காவலில் வைத்து கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால் பலத்த காயமடைந்த பாலமுருகனை மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தகவல் தெரிந்து நாங்கள் சென்று பார்த்த போது அவசர சிகிச்சை பிரிவில் சுயநினைவு இல்லாமல் இருந்தார்.

அவனியாபுரம் காவல் ஆய்வாளர் ரமணி, சார்பு ஆய்வாளர் சக்தி மணிகண்டன், அண்ணாநகர் காவல் நிலைய சிறப்பு பிரிவு காவல் ஆய்வாளர் பெத்துராஜ் மற்றும் காவல் ஆய்வாளர்கள் என் மகனை சட்டவிரோதமாக காவலில் வைத்து கடுமையாக தாக்கியுள்ளனர்.
இது தொடர்பாக மாவட்ட நீதிபதிக்கு புகார் அனுப்பினேன். அவர் உத்தரவின் பேரில் 24.10.2018-ல் 5வது நீதித்துறை நடுவர் அரசு மருத்துவமனைக்கு சென்று விசாரித்தனர்.

மாலையில் பாலமுருகன் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
என் மகன் பிரேத பரிசோதனையை தடயவியல் துறையைச் சேர்ந்த இரு பேராசிரியர்கள் முன்னிலையில் மேற்கொள்ளவும், பிரேத பரிசோதனையை வீடியோவில் பதிவு செய்யவும், சம்பவம் தொடர்பாக தலைமை குற்றவியல் நடுவர் விசாரிக்கவும், உரிய இழப்பீடு வழங்கவும், அவனியாபுரம் காவல் நிலையத்தின் 20.10.2019 முதல் 22.10.2019 வரையிலான சிசிடிவி கேமரா பதிவுகளை பாதுகாக்கவும், போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன்,அவனியாபுரம் காவல் நிலையத்தின் 20.10.2019 முதல் 22.10.2019 வரையிலான சிசிடிவி பதிவுகளை பாதுகாக்க வேண்டும். பிரேத பரிசோதனையை வீடியோவில் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு
விசாரணையை நவம்பர் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.