ETV Bharat / city

அரசுப் பள்ளியின் கல்வித் தரத்தை உயர்த்தக்கோரி சைக்கிள் பேரணி

மதுரை: மத்திய அரசுப் பள்ளி மாணவர்களுக்கு செலவழிக்கும் தொகையை மாநில அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் ஒதுக்க வேண்டுமென இந்திய மாணவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

சைக்கிள் பேரணி
author img

By

Published : May 30, 2019, 8:26 AM IST

மார்க்சிஸ்ட் கம்யூனிட் கட்சியின் மாணவர்கள் பிரிவான எஸ்எஃப்ஐயின் சார்பில் அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதி செய்து தரக்கோரி மே 25ஆம் தேதி சைக்கிள் பேரணியை தொடங்கினர். இந்தப் பேரணி 31ஆம் தேதி முடிவு பெறுகிறது.

இந்நிலையில் கன்னியாகுமாரி களியக்காவிளையிலிருந்து தொடங்கி மதுரை திருப்பரங்குன்றம் வரை சைக்கிளில் பேரணியாக நூற்றுக்கும் மேற்பட்டோர் சென்றனர்.

அரசுப் பள்ளியின் கல்வித் தரம் உயரவேண்டி சைக்கிள் பேரணி

இது குறித்து இந்திய மாணவர் சங்க மாநிலத் தலைவர் பேசியதாவது, "மத்திய அரசுப் பள்ளிகளில் ஒரு மாணவருக்கு ஆண்டுக்கு 27 ஆயிரம் ரூபாய் வரை மத்திய அரசு செலவு செய்கிறது. ஆனால் மாநில அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களைக் கண்டு கொள்வதில்லை, இந்த நிலை மாற்றப்பட வேண்டும். தற்போதுள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். தமிழகத்தில் மூன்று லட்சம் பள்ளிகள் மற்றும் இந்திய அளவில் ஒன்பது லட்சத்திற்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் மூடப்படும் அபாய நிலையில் உள்ளன. அதனை மீட்டெடுக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.

வெங்கடேஷ்வரன்
மதுரை
29.05.2019

மத்திய அரசு பள்ளி மாணவர்களுக்கு செலவழிக்கும் தொகையை மாநில அரசு பள்ளி மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் -  இந்திய மாணவர் சங்கம் கோரிக்கை
தமிழக  அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் - எஸ்எஃப் ஐ

இந்திய மாணவர் சங்கம் சார்பில் அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதி செய்து தரக் கோரியும் அரசுப் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க வலியுறுத்தியும்   களியக்காவிளையிலிருந்து திருச்சியை நோக்கி சைக்கிள் பேரணியாக செல்கின்றனர்.

இந்நிலையில் நாகர்கோவில், நெல்லை, விருதுநகர் வழியாக இன்று மதுரை திருப்பரங்குன்றத்திற்கு சைக்கிள் பேரணி  வந்தடைந்தது. அப்போது அகில இந்திய மாணவர் சங்கம் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது;

அரசு பள்ளிகளில் உள்ள அடிப்படை வசதிகளை மேம்படுத்த கோரியும் கழிப்பறை வசதிகள் குடிநீர் வசதிகள் இருக்கை வசதிகள் முதலானவை தரம் உயர்த்தப்பட வேண்டும்,

தனியார் பள்ளிகளை  ஊக்குவிக்கும் விதமாக மத்திய மாநில அரசுகள் செயல்பட்டு வருகிறது
மத்திய அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வருடத்திற்கு ஒரு மாணவருக்கு 27 ஆயிரம் ரூபாய் வரை மத்திய அரசு  செலவிடுகிறது. ஆனால்  மாநில அரசு பள்ளியில்  பயிலும் மாணவர்களை கண்டு கொள்ளாமல் உள்ளது,

இந்த நிலையை மாற்றி அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அனைத்து அடிப்படை வசதிகளையும் மேம்படுத்தி தர வேண்டும் .தற்போது ஆசிரியர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.,

தமிழகத்தில் 3 லட்சம் பள்ளிகள் மற்றும் இந்திய அளவில் 9 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் மூடப்படும் அபாயம் நிலையில் உள்ளது பனை அதனை மீட்டெடுக்க வேண்டும் முதலான கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தி இந்த பேரணியானது தொடர்வதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பேரணி மதுரை நோக்கிச் சென்றது. பின்னர் அங்கிருந்து  திருச்சி நோக்கி செல்கிறது. கன்னியாகுமரி, கடலூர்  சென்னை கோவை நான்கு மண்டலங்களில் இருந்து மே.25 ல் தொடங்கிய பேரணி 31ம் தேதி இந்திய மாணவர் சங்கத்தினர் சைக்கிள் பேரணியாக   வந்து திருச்சியில் சங்கமிப்பதாக தெரிவித்தனர்.

பேட்டி : கண்ணன் - மாநில தலைவர்
இந்திய மாணவர் சங்கம்.

Visual send in ftp
Visual name : TN_MDU_03_29_CYCLE RALLY_TN10003

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.