ETV Bharat / state

கூத்தாடி என்பதா?... “உச்சத்தை விட்டு வந்திருக்கிறேன்”... உதாரணம் சொன்ன விஜய்!

Vijay TVK maanaadu: தவெக தலைவர் விஜய் விக்கிரவாண்டியில் மாநாட்டில் தன்னை கூத்தாடி என்று அழைத்தது பற்றி ஒரு குட்டி கதையை கூறியுள்ளார்.

தவெக மாநாட்டில் குட்டி கதை சொன்ன விஜய்
தவெக மாநாட்டில் குட்டி கதை சொன்ன விஜய் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 27, 2024, 7:57 PM IST

விழுப்புரம்: தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் நடிகர்களை கூத்தாடி என்று அழைப்பது குறித்து தவெக தலைவர் விஜய் ஆவேசமாக பேசியுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிம் கழகம் என்ற கட்சியை தொடங்கிய விஜய், கடந்த மாதம் கட்சி கொடியை அறிமுகப்பத்தினார். அப்போது தவெக கட்சியின் கொள்கையை கட்சியின் முதல் மாநாட்டில் அறிவிப்பேன் என தெரிவித்தார். இதனையடுத்து விஜய் ரசிகர்கள் தவெக மாநாட்டில் விஜய் என்ன பேசப் போகிறார் என ஆவலுடன் இருந்தனர்.

இன்று லட்சக்கணக்கானோர் கலந்து கொண்ட தவெக மாநாடு விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் விஜய் பேசுவதற்கு முன்பு மேடைக்கு அருகில் அமர்ந்திருந்த அவரது பெற்றோரிடம் ஆசி பெற்றார். இதனைத்தொடர்ந்து தனது கட்சி கொள்கையை தெரிவித்தார்.

தவெக மாநாட்டில் குட்டி கதை சொன்ன விஜய் (Credits - ETV Bharat Tamil Nadu)

மேலும் விஜய் பேச்சின் நடுவே ஒரு குட்டிக்கதை கூறினார். அவர் கூறியதாவது, ”இது ஊக்கப்படுத்தும் கதை கிடையாது. ஒரு நாட்டில் போர் வந்த போது தலைமை இல்லாததால் ஒரு சிறு பிள்ளையிடம் தலைமை பொறுப்பு இருந்ததாம். அந்த சிறுவன் போர்க்களம் போகலாம் என்று கூறியுள்ளார்.

அப்போது பெரியவர்கள் இது சாதாரண விஷயமல்ல, விளையாட்டல்ல, போர் என்றால் படையை வழி நடத்த வேண்டும், எதிரிகளை சமாளித்து தாக்கு பிடிக்க வேண்டும், உனக்கு துணை இல்லாமல் எப்படி வெற்றி கிடைக்கும் என கேட்டனர். எந்த பதிலும் சொல்லாமல் பாண்டிய வம்சத்தை சேர்ந்த சிறுவன் போருக்கு சென்றார். கெட்ட பய சார் அந்த சின்ன பையன்” என்றார்.

பின்னர் மேடைக்கு நடுவே வந்த தவெக தலைவர் விஜய், “இதுவரைக்கும் கொள்கை, கோட்பாடு என பேசுகிற விஜயை பார்த்திருப்பீர்கள், தற்போது உங்களோடு மனதோடு மனதாக பேசும் விஜய் பாருங்கள். என்ன தான் நீங்கள் என்னை ’தளபதி’ என்று ஆசையா கூப்பிட்டாலும் கூத்தாடி, கூத்தாடி விஜய் எனு கூறியவர்கள் அதிகம். கூத்து என்பது மண்ணோடும் மக்களோடும் கலந்த ஒன்று.

திராவிட இயக்கம் பட்டிதொட்டி எங்கும் சென்று சேர்ந்ததற்கு காரணம் சினிமா தான். கூத்தாடிகள் என்பது கெட்ட வார்த்தையா, கூத்தாடிகள் என்றால் கேவலமா கூத்தாடிகள் கோபம் கொப்பளித்தால் அவர்களை கட்டுப்படுத்த முடியாது. அன்று கூத்தாக இருந்தது இன்று சினிமாவாக மாறியுள்ளது.

இதையும் படிங்க: திராவிட மாடல்.. பாசிசம் எதிர்ப்பு.. தவெக முதல் மாநாட்டில் விஜய் முதல் முழு மேடைப்பேச்சு!

கூத்தாடி என்று நம்மை மட்டும் இல்லை நம்ம ஊரு வாத்தியார் எம்.ஜி.ஆர், ஆந்திரா மாநில வாத்தியார் என்.டிஆர்ரையும் கூறியுள்ளனர். அவர்களையே அப்படி அழைத்த போது, என்னை எப்படி விட்டு வைப்பார்கள். ஆனால் பின்னாளில் அந்த இரண்டு கூத்தாடிகள் தான் ஆகப் பெரும் தலைவர்களாகி தற்போதும் மக்கள் மனதில் வாழ்த்து வருகிறார்கள். எனது சினிமா கரியரில் உச்சத்தை உதறிவிட்டு, அந்த ஊதியத்தை உதறிவிட்டு உங்கள் விஜயாக உங்களை நம்பி வந்துள்ளேன்” என கூறியுள்ளார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.