ETV Bharat / state

"பெரியார், அம்பேத்கர் படம் வைத்தால் மட்டும் போதாது".. தவெக மாநாடு குறித்து கி.வீரமணி கருத்து!

பெரியார், அம்பேத்கர் படங்கள் வைத்தால் மட்டும் போதாது கொள்கை என்னவென்று சொல்லட்டும் அதன் பிறகு நாங்கள் வரவேற்கிறோம் என தவெக மாநாடு குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தெரிவித்துள்ளார்.

தவெக தலைவர் கி.வீரமணி மற்றும் தவெக மாநாட்டில் வைக்கப்பட்டுள்ள கட் அவுட்
தவெக தலைவர் கி.வீரமணி மற்றும் தவெக மாநாட்டில் வைக்கப்பட்டுள்ள கட் அவுட் (Credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 27, 2024, 8:41 PM IST

ஈரோடு: ஈரோடு மாவட்டம் ஆசனூர் மலைப்பகுதியில் திராவிடர் கழகம் சார்பில் பெரியாரியல் பயிற்சி பட்டறை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாநில முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான கல்லூரி மாணவ,மாணவியர்கள், இளைஞர்கள் பங்கேற்றனர். பெரியார் கொள்ளை, அவரின் சமுதாய பணிகள் கடவுள் மறுப்பு இயக்கம் போன்றவற்றை இளைய சமுதாய மத்தியில் கொண்டு செல்ல முயற்சியாக இந்த மாநாடு ஏற்படுத்தப்படுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி கலந்து கொண்டார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கி.வீரமணி கூறியதாவது, "தமிழகத்தில் எத்தனையோ கட்சிகள் உள்ளது. கட்சி தொடங்குவதற்கு உச்ச வரம்பு கிடையாது. நிலத்திற்கு உச்ச வரம்பு உண்டு.

தவெக தலைவர் கி.வீரமணி செய்தியாளர் சந்திப்பு (Credit - ETV Bharat Tamil Nadu)

இதையும் படிங்க: "விகிதாரசார அடிப்படையிலான இடஒதுக்கீடு..போதையில்லா தமிழகம்": தவெக மாநாட்டில் கொள்கைகள் பிரகடனம்!

அரசியலில் உச்ச வரம்பு கிடையாது. கட்சி தொடங்குவதற்கு எந்த தடையும் கிடையாது. புதிய கட்சிகள் மார்க்கெட்டிங் சப்ஜெக்ட் உடன் தவிர்க்க முடியாதது எது எதுவோ அதையெல்லாம் பயன்படுத்தி அரசியலுக்கு வரலாம் என உணருகின்றனர். பெரியார் அம்பேத்கர் படங்கள் வைப்பது என்பதை விட கொள்கை என்ன என்று சொல்லட்டும்.

பிறகு எங்கள் கருத்தை சொல்கிறோம். கொள்கையைச் சொன்னால் நாங்கள் வரவேற்கிறோம். இளைஞர்கள் மத்தியில் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அமேசான் போன்ற ஆன்லைன் நிறுவனங்களின் புத்தக விற்பனையைப் பரவலாக்கி உள்ளோம்" என தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.