ETV Bharat / city

குடும்ப உறுப்பினருக்கு கரோனா: தனிமைப்படுத்திக் கொண்ட மதுரை ஆட்சியர் - corona for madurai collector family member

மதுரை: தன்னுடைய குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து, மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.

மதுரை ஆட்சியர் அன்பழகன், மதுரை,  ஆட்சியர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார், madurai collector anbazhagan, madurai collector
corona for madurai collector family member
author img

By

Published : May 16, 2021, 11:05 PM IST

மதுரை மாவட்ட ஆட்சியர் த.அன்பழகனின் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், குடும்ப உறுப்பினருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் ஆட்சியர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள், உதவியாளர்கள், ஆட்சியர் இல்லத்தில் பணிபுரியும் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் ஆட்சியர் இல்லம், முகாம் அலுவலகம் ஆகியவற்றில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: மதுரையில் 4 இடங்களில் தேசியப் புலனாய்வு முகமை அலுவலர்கள் ஆய்வு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.