ETV Bharat / city

மதுரை அரசு பேருந்தில் திடீரென பற்றிய தீ- பயணிகள் அலறல்!

மதுரை: சாலையில் சென்றுக் கொண்டிருந்த அரசு பேருந்தில் திடீரென ஏற்பட்ட தீயால் பயணிகள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை அரசுப் பேருந்தில் திடீரென பற்றிய தீ! பயணிகள் அலறல்
author img

By

Published : Apr 7, 2019, 10:56 PM IST

மதுரை ஆரப்பாளையத்திலிருந்து மாட்டுத்தாவணிக்கு செல்லும் அரசு பேருந்து பால்பண்ணை சந்திப்பு அருகே வந்த போது திடீரென எந்திரத்தில் தீ பற்றி எரிந்துள்ளது. உடனடியாக ஓட்டுநர் பேருந்தை சாலையில் நிறுத்திவிட்டு பயணிகளை இறங்கும்படி கூச்சலிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். ஓட்டுநர் பேருந்தை சாலையில் நிறுத்தி துரிதமாக செயல்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர். முதற்கட்ட விசாரணையில் உயர் வெப்ப அழுத்தத்தின் காரணமாகவே எந்திரத்தில் இருந்து புகை ஏற்பட்டு தீ பற்றியது தெரிய வந்துள்ளது.

வெங்கடேஷ்வரன்
மதுரை
07.04.2019

*மதுரையில் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தில் திடீரென ஏற்பட்ட தீயால் பரபரப்பு -பயணிகள் ஓட்டம்*

மதுரை ஆரப்பாளையத்தில் இருந்து
மாட்டுத்தாவணி செல்லும் அரசு பேருந்து பால்பண்ணை சந்திப்பு அருகே வந்தபோது திடீரென இன்ஜினில் தீ பற்றி எரிந்துள்ளது,

உடனடியாக ஓட்டுநர் பேருந்தை சாலையில் நிறுத்திவிட்டு பயணிகளை இறங்கும்படி கூச்சலிட்டுள்ளார்,

அதனை தொடர்ந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கபட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்,

ஓட்டுநர் பேருந்தை சாலையில் நிறுத்தி துரிதமாக செயல்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டுள்ளது,

முதல்கட்ட விசாரணையில் உயர் வெப்ப அழுத்தத்தின் காரணமாகவே இன்ஜினில் இருந்து புகை ஏற்பட்டு தீபற்றியது.

Visual send in ftp
Visual name : TN_MDU_02_07_BUS FIRE_TN10003

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.