ETV Bharat / city

எட்டாக்கனியாகும் எய்ம்ஸ் மருத்துவமனை;2023ஆம் ஆண்டுதான் பணிகள் தொடங்கும் எனத் தகவல் - ஜைகா நிறுவனம் ஒப்பந்தம்

மதுரை தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகள் வருகின்ற 2023ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, 2026ஆம் ஆண்டு நிறைவடையும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தென் மாவட்ட மக்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

எய்ம்ஸ்
எய்ம்ஸ்
author img

By

Published : Jan 27, 2022, 10:39 PM IST

மதுரை: தென் மாவட்ட மக்கள் பயனடையும் நோக்கில் இந்திய ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்டு, பல கட்ட தேர்வுகளுக்குப் பிறகு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கக் கடந்த 2015ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி முடிவானது.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த 2018ஆம் ஆண்டு ஜூன் 20ஆம் தேதி வெளியானது. மதுரை-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலைக்கு அருகே மதுரை மாவட்டம் தோப்பூர் அருகே எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிலங்கள் தமிழ்நாடு அரசால் கையகப்படுத்தப்பட்டன.

புலி வருது.. புலி வருது..

இதே காலகட்டத்தில் தான், இந்தியாவின் பிற மாநிலங்களில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், 'புலி வருது... புலி வருது..' கதையாக மதுரை எய்ம்ஸ்க்கு மட்டும் விடிவு காலம் பிறக்கவில்லை.

இந்நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார்.
அதுமட்டுமன்றி, அடுத்த 45 மாதங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்குத் திறந்து வைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

ஜைகா நிறுவனம் ஒப்பந்தம்

இதற்கிடையே மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கான நிதிக்காக ஜப்பானைச் சேர்ந்த ஜைகா என்ற அமைப்புடன் இந்திய அரசால் கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26ஆம் தேதி கடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

அதைத் தொடர்ந்து, இந்த மருத்துவமனைக்கு ரூ.1977.80 கோடிகள் என புதிய திருத்தப்பட்ட திட்ட மதிப்பீடாக அறிவிக்கப்பட்டது.

இந்தத் தொகையில் ரூ.1627.70 கோடியை ஜைகா நிறுவனம் மூலமாகவும் மீதமுள்ள தொகை இந்திய ஒன்றிய அரசாலும் வழங்கப்படும் என முடிவு செய்யப்பட்டது.

இதன் தொடர்ச்சியாகத் திட்ட அமலாக்கக் குழுவும் அதற்கான பதவிகளும் உருவாக்கப்பட்டன.

கிடப்பில் உள்ள பணிகள்

இந்தியாவில் 22 இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், 6 மருத்துவமனைகள் ஏற்கனவே செயல்பட்டு வருகின்றன.

மீதமுள்ள 16 மருத்துவமனைகளில் பல மாநிலங்கள் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் எய்ம்ஸ் குறித்த மத்திய அரசின் பரிந்துரைகள் குறித்து முடிவெடுப்பதற்கான கூட்டம் கடந்தாண்டு ஜூலை 16ஆம் தேதி நடைபெற்றது.

அதில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை சார்பாகத் தற்காலிகமாக மதுரை, தேனி, சிவகங்கை மருத்துவக் கல்லூரிகளில் முதற்கட்டமாக 50 எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கைக்காக இந்திய ஒன்றிய அரசிடம் பரிந்துரையும் அளிக்கப்பட்டது.

கானல் நீராகும் எய்ம்ஸ்

மேலும், இது தொடர்பான ஜப்பான் நிறுவனத்துடனான ஒப்பந்தம் 2021ஆம் ஆண்டு மார்ச் 31இல் இறுதியாகும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒன்றிய அரசின் சார்பாக மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தும் கூட, இதுவரை மதுரை தோப்பூரில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டதைத் தவிர வேறு எந்தவிதமான கட்டுமானப்பணிகளும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனைப் பணிகள் குறித்து அவ்வப்போது ஒன்றிய மற்றும் மாநில அமைச்சர்கள் கருத்து தெரிவித்து வந்தாலும், அதுகுறித்து முழுமையான வடிவம் குறித்து குழப்பமான நிலையே நீடித்து வந்தது.

இதற்கிடையே கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற நிர்வாக அளவிலான கூட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகள் வருகின்ற 2023ஆம் ஆண்டு தொடங்கி 2026ஆம் ஆண்டுதான் நிறைவடையும் என அறிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: திருப்பூரில் 4 நாள்களாக போக்குக் காட்டிய சிறுத்தை பிடிபட்டது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.