ETV Bharat / city

பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு காவல்துறையில் பணி வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு! - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

மதுரை: தமிழ்நாடு காவல்துறையின் தொழில்நுட்ப பிரிவு சார்பு ஆய்வாளர்கள் மற்றும் கைரேகை பிரிவு சார்பு ஆய்வாளர்கள் பணியிடங்களுக்கான தேர்வில் வெற்றி பெற்று பார்வை குறைபாடு காரணமாக பணி மறுக்கப்பட்டவர்களுக்கு பணி வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Maduraihc
author img

By

Published : May 1, 2019, 11:45 AM IST

தமிழ்நாடு காவல்துறையில் தொழில்நுட்ப பிரிவு சார்பு ஆய்வாளர்கள் மற்றும் கைரேகை பிரிவு சார்பு ஆய்வாளர்கள் ஆகிய 309 பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் 11.7.2018இல் அறிவிப்பாணை வெளியிட்டது. இப்பணிக்கான எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ பரிசோதனையில் பார்வை திறன் குறைபாடு இருப்பதாக கூறி சார்பு ஆய்வாளர் பணிக்கு நிராகரிக்கப்பட்ட ராஜதுரை உட்பட 15 பேர் தங்களை காவல் துறையில் தொழில்நுட்ப பிரிவு மற்றும் கைரேகை பிரிவு சார்பு ஆய்வாளர்களாக நியமிக்கக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதி மகாதேவன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அதில், "தொழில்நுட்ப பிரிவு, கைரேகை பிரிவு சார்பு ஆய்வாளர் பணிக்கு பார்வை திறன் ஒரு பிரச்னையே இல்லை. கண் அறுவை சிகிச்சை செய்தவர்களும் சார்பு ஆய்வாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மனுதாரர்களுக்கு மட்டும் பணி மறுக்கப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டது. கூடுதல் அட்வகேட் ஜெனரல் வாதிடுகையில், "தமிழ்நாடு சீருடை பணிகளுக்கு பார்வை திறன் முக்கியமானது. இதை தமிழக அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. அந்த அடிப்படையில் மனுதாரர்களுக்கு பார்வை திறன் குறைபாடு இருந்ததால் பணி நிராகரிக்கப்பட்டது" என்றார்.

இதையடுத்து நீதிபதி, "அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்பு பெறுவோருக்கு மருத்துவ தகுதி முக்கியமானது. வேலைகளுக்கு உடல் மற்றும் மனதளவில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். ராணுவம், காவல்துறை பணிகளுக்கு உடல் தகுதி முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. சார்பு ஆய்வாளர் பணிக்கு முழு பார்வைத்திறன் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை விண்ணப்பம் கோரும் போது தெரிவிக்காமல், நேர்முகத் தேர்வு முடிந்த பிறகு தெரிவித்தது சரியான வழியல்ல.

இது தொடர்பாக 2000ஆம் ஆண்டில் உள்துறை அரசாணை பிறப்பித்ததாக அரசு கூறுகிறது. இந்த நிபந்தனையை அறிவிப்பாணையில் குறிப்பிட்டிருந்தால் பார்வை திறன் குறைபாடு இருப்பவர்களை விண்ணப்பிக்காமல் தடுத்திருக்கலாம். அதை செய்யாமல் விண்ணப்பிக்க அனுமதித்துவிட்டு, அனைத்து தேர்வுகளிலும் வெற்றிப்பெற்ற நிலையில் புதிதாக ஒரு நிபந்தனையை விதிப்பது சரியல்ல.

தற்பாது கற்பனைக்கு எட்டாத உயரத்துக்கு தொழில்நுட்பம் உயர்ந்துவிட்டது. கண்ணாடி மூலம் கிரகங்களையும், நட்சத்திரங்களையும் பார்க்கும் காலம் வெகு தொலைவில் இல்லை. மனுதாரர்களுக்கு ஏற்பட்டுள்ள பார்வை திறன் குறைபாடு எளிதில் சரிசெய்யக்கூடியாது. எனவே மனுதாரர்களுக்கு பணி வழங்க மறுத்தது சட்டவிரோதம். அந்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரர்களுக்கு சார்பு ஆய்வாளர் பணி வழங்க வேண்டும்.

எதிர்காலத்தில் அரசு உத்தரவு மற்றும் விதிப்படியான நிபந்தனைகள் இருந்தால், அந்த நிபந்தனைகளை பணித் தேர்வு தொடர்பான அறிவிப்பாணை வெளியிடும் போதே தெரிவிக்க வேண்டும். இந்த நடைமுறையால் அனைத்து தேர்வுகளிலும் வெற்றிபெற்று வேலைக்காக காத்திருப்பவர்கள் பிரச்னையை சந்திக்க வேண்டியது வராது" என உத்தரவிட்டார்.

தமிழகத்தில் காவல் துறையில் தொழில்நுட்ப பிரிவு சார்பு ஆய்வாளர்கள் மற்றும் கைரேகை பிரிவு சார்பு ஆய்வாளர்கள் பணியிடங்களுக்கான தேர்வில் வெற்றி பெற்று பார்வை குறைபாடு காரணமாக பணி மறுக்கப்பட்டவர்களுக்கு  பணி வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

சார்பு ஆய்வாளர் பணிக்கு முழு பார்வை திறன் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை விண்ணப்பம் கோரும் போது தெரிவிக்காமல், நேர்முகத் தேர்வு முடிந்த பிறகு தெரிவித்தது சரியான வழியல்ல - நீதிபதி

எதிர்காலத்தில் அரசு உத்தரவு மற்றும் விதிப்படியான நிபந்தனைகள் இருந்தால், அந்த நிபந்தனைகளை பணித் தேர்வு தொடர்பான அறிவிப்பாணை வெளியிடும் போதே தெரிவிக்க வேண்டும் - நீதிபதி

தமிழகத்தில் காவல் துறையில் 309 தொழில்நுட்ப பிரிவு சார்பு ஆய்வாளர்கள் மற்றும் கைரேகை பிரிவு சார்பு ஆய்வாளர்கள் பணியிடங்களை நிரப்புவது  தொடர்பாக தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் 11.7.2018-ல் அறிவிப்பாணை வெளியிட்டது.

இப்பணிக்கான எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ பரிசோதனையில் பார்வை திறன் குறைபாடு இருப்பதாக கூறி சார்பு ஆய்வாளர் பணிக்கு நிராகரிக்கப்பட்ட ராஜதுரை உட்பட 15 பேர் தங்களை காவல் துறையில் தொழில்நுட்ப பிரிவு மற்றும் கைரேகை பிரிவு சார்பு ஆய்வாளர்களாக நியமிக்கக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுக்களைத் தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள்  நீதிபதி மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர்கள் சார்பில்,"
தொழில்நுட்ப பிரிவு, கைரேகை பிரிவு சார்பு ஆய்வாளர் பணிக்கு பார்வை திறன் ஒரு பிரச்சினையே இல்லை.
கண் அறுவை சிகிச்சை செய்தவர்களும் சார்பு ஆய்வாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.  மனுதாரர்களுக்கு மட்டும் பணி மறுக்கப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டது.

கூடுதல் அட்வகேட் ஜெனரல் வாதிடுகையில்," தமிழ்நாடு சீருடை பணிகளுக்கு பார்வை திறன் முக்கியமானது. இதை தமிழக அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. 

அந்த அடிப்படையில் மனுதாரர்களுக்கு பார்வை திறன் குறைபாடு இருந்ததால் பணிக்கு நிராகரிக்கப்பட்டனர்"
என்றார்.

இதையடுத்து நீதிபதி ,"
அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்பு பெறுவோருக்கு மருத்துவ தகுதி முக்கியமானது. வேலைகளுக்கு உடல் மற்றும் மனதளவில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். ராணுவம், காவல் துறை பணிகளுக்கு உடல் தகுதி முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

சார்பு ஆய்வாளர் பணிக்கு முழு பார்வை திறன் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை விண்ணப்பம் கோரும் போது தெரிவிக்காமல், நேர்முகத் தேர்வு முடிந்த பிறகு தெரிவித்தது சரியான வழியல்ல. 
இது தொடர்பாக 2000-ம் ஆண்டில் உள்துறை அரசாணை பிறப்பித்ததாக அரசு கூறுகிறது.

. இந்த நிபந்தனையை அறிவிப்பாணையில் குறிப்பிட்டிருந்தால் பார்வை திறன் குறைபாடு இருப்பவர்களை விண்ணப்பிக்காமல் தடுத்திருக்கலாம். அதை செய்யாமல் விண்ணப்பிக்க அனுமதித்துவிட்டு, அனைத்து தேர்வுகளிலும் வெற்றிப்பெற்ற நிலையில் புதிதாக ஒரு நிபந்தனையை விதிப்பது சரியல்ல.

தற்பாது தொழில்நுட்பம் கற்பனைக்கு எட்டாத உயரத்துக்கு தொழில்நுட்பம் உயர்ந்துவிட்டது. கண்ணாடி மூலம் கிரகங்களையும், நட்சத்திரங்களையும் பார்க்கும் காலம் வெகு தொலைவில் இல்லை. மனுதாரர்களுக்கு ஏற்பட்டுள்ள பார்வை திறன் குறைபாடு எளிதில் சரிசெய்யக்கூடியாது.
அப்படியிருக்கும் போது மனுதாரர்களுக்கு பணி வழங்க மறுத்தது  சட்டவிரோதம்.

 அந்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரர்களுக்கு சார்பு ஆய்வாளர் பணி வழங்க வேண்டும்.

எதிர்காலத்தில் அரசு உத்தரவு மற்றும் விதிப்படியான நிபந்தனைகள் இருந்தால், அந்த நிபந்தனைகளை பணித் தேர்வு தொடர்பான அறிவிப்பாணை வெளியிடும் போதே தெரிவிக்க வேண்டும். இந்த நடைமுறையால் அனைத்து தேர்வுகளிலும் வெற்றிப்பெற்று வேலைக்காக காத்திருப்பவர்கள் பிரச்சினையை சந்திக்க வேண்டியது வராது"
என உத்தரவிட்டார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.