ETV Bharat / city

சட்ட விரோதமாக செயல்படும் கடன் வழங்கும் செயலிகள் - நீதிபதிகள் வருத்தம் - மதுரை நீதிமன்ற செய்திகள்

கடன் செயலி மூலம் கடன் பெற்று தற்கொலை செய்வது இந்தியாவில் மிக முக்கிய பிரச்னையாக இருந்து வருகிறது. இது வருத்தத்திற்கு உரியது என நீதிபதிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

loan app case
loan app case
author img

By

Published : Jan 6, 2021, 2:38 PM IST

மதுரை: அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார்.

அதில், "வளர்ந்து வரும் நவீன காலத்தில் கைப்பேசி அனைவரும் பயன்படுத்தக்கூடிய ஒன்றாக இருந்துவருகிறது. கைப்பேசி மூலமாக கடன் பெறுவதற்காக பல புதிய செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலிகள் ரிசர்வ் வங்கியின் அனுமதி இல்லாமல் செயல்பட்டு வருகிறது.

இதுபோன்ற கடன் பெறுவதற்கு பல்வேறு செயலிகள் புதிதாக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக கைப்பேசி மூலமாக பல்வேறு விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த செயலிகளின் மூலம் கடன் பெறுபவர்களுக்கு அதிகப்படியான வட்டி வசூலிக்கப்படுகிறது. கைப்பேசி செயலிகளில் கடன் தரும் அவர்கள், எந்தவிதமான சட்ட திட்டங்களையும் பின்பற்றுவது இல்லை.

இவ்வாறு கடன் பெற்று கடன்களை சரியாக செலுத்தாத நபர்களின் விவரங்கள், புகைப்படங்களை வாட்ஸ்அப் செயலியில் உள்ள குழுக்களில் பகிர்வது, கைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு தவறாக பேசுவது; மிரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதன் காரணமாக கடன் பெற்றவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் மனநிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

செயலி மூலம் கடன் வாங்கியவர்களை அச்சுறுத்தும் கும்பல்!

கூகுள் ப்ளே ஸ்டோர் மூலம் பஜாஜ் பின்சர்வ், கேப்பிடல் ஃபர்ஸ்ட், கேஷ் இ, ஸ்மார்ட் காயின் உட்பட 50க்கும் மேற்பட்ட செயலிகள் கடன்களை வழங்கி வருகின்றனர். இவர்கள் மீது பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. இந்த செயலியில் கடன் பெற்ற ஆந்திராவைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் செயலி மூலம் கடன் பெற்றவர்கள் தற்கொலை செய்வது அதிகரித்து வருகிறது.

கடன் வழங்கும் பல செயலிகளில் சீனாவின் முதலீடு மறைமுகமாக உள்ளது தெரிய வருகிறது. இவர்கள் இந்தியாவில் உள்ள சிலர் மூலம் வங்கி பரிவர்த்தனைகளை மறைமுகமாக செய்துவருகின்றனர். இதனால் கடன் வழங்கும் செயலிகள் குறித்து மத்திய அரசு விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும். மேலும், ரிசர்வ் வங்கி இதுபோன்ற சட்ட விரோதமாக செயல்படும் செயலிகளுக்கு தடை விதிக்க நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என தனது மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எம்எம் சுந்தரேஷ் ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கண்ணன் ஆஜராகி, “ஆன்லைன் ரம்மி போன்று, தற்போது இந்த கடன் வழங்கும் செயலிகள் அதிகரித்து வருகின்றது. இதனால் இளைஞர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் பல்வேறு தற்கொலைகள் நடந்து வருகின்றது. எனவே சட்டவிரோதமாக நடைபெற்று வரும் இந்த பண பரிமாற்ற பரிவர்த்தனைகளை நீதிமன்றம் தடை செய்ய வேண்டும்” என வாதிட்டார்.

உயிர் பறிக்கும் கடன் செயலிகள்!

அப்போது நீதிபதிகள், தற்போது செயலி மூலம் கடன் பெற்று தற்கொலை செய்வது இந்தியாவில் மிக முக்கிய பிரச்னையாக இருந்து வருகிறது வருத்தத்திற்குரியது. மனுதாரரின் தகவலின் அடிப்படையில், இது போல கடன் செயலி மூலமாக நாட்டுக்குள் சமூக விரோத சக்திகள் உட்புக வாய்ப்புள்ளது என கருத்து தெரிவித்த நீதிபதிகள், செயலி மூலம் கடன் பெறுவதில் இரண்டு முக்கிய பிரச்னைகள் இருந்து வருகிறது என்று குறிப்பிட்டு பேசினர். அவை,

  1. செயலி மூலம் கடன் வழங்குபவர்கள் அவர்களுக்கான விதிமுறைகளை அவர்களே உருவாக்கியுள்ளனர். இது சட்ட விரோதம்.
  2. கடன்களை வசூல் செய்வதில் அங்கீகரிக்க முடியாத முறைகளைப் பின்பற்றுகின்றனர். இவை இரண்டும் சட்டத்திற்கு உட்பட்டு நடைபெறுவது இல்லை

இவ்வாறு கூறிய நீதிபதிகள் மனு குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர், கூகுள் நிறுவனம், மத்திய நிதித்துறை செயலர், தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை பிப்ரவரி 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.