ETV Bharat / city

'மழைவந்த பிறகு தண்ணீர் தருவதற்கு அரசு எதற்கு?'

மதுரை: மழை வந்த பின் தண்ணீர் தருகிறோம் என்று சொல்வதற்கு ஒரு அரசு தேவையில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

ks alagiri
author img

By

Published : Jun 22, 2019, 3:55 PM IST

இது குறித்து அவர் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “அதிமுக அரசின் வருண ஜெபம் என்பது போர்க்களத்தில் இருக்கும் வீரர் துப்பாக்கி இல்லாதது போல் இருக்கிறது. போர்க்களத்திற்கு செல்பவர்கள் துப்பாக்கியுடன் செல்ல வேண்டும். துப்பாக்கி இல்லாமல் போனால் ஒரு போர் வீரரின் நிலை எவ்வளவு பரிதாபமோ அப்படித்தான் தமிழ்நாடு அரசின் நிலை இருக்கிறது.

குடிப்பதற்கு தண்ணீர் கேட்டால் நாங்கள் மழைக்காக வேண்டுகிறோம். மழை வந்த பின் தண்ணீர் தருகிறோம் என்று சொல்வதற்கு ஒரு அரசு தேவையில்லை.

ஒரு அரசு இன்றியமையாத கடமையை செய்வதற்கு தவறி இருக்கிறது. அதற்காக இந்த அரசு வெட்கப்பட வேண்டும். குடிநீர் பிரச்னையை அரசியலாக்கக் கூடாது என அமைச்சர்கள் சொல்கிறார்கள். அதனை எப்படி அரசியலாக்காமல் இருப்போம். கேரளாவில் முதலமைச்சர் தண்ணீர் கொடுக்கத் தயார். ஆனால் தண்ணீரை கேட்டுப் பெறுவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் தயாராக இல்லை.

ஏனென்றால் அவர் வீட்டிற்கு ஒரு நாளைக்கு 4 லாரி தண்ணீர் செல்கிறது; அதனால் அவர் கவலைப்பட மாட்டார். ஆனால் மக்களின் சிரமத்தை அவர்களும் சேர்ந்து அனுபவிக்க வேண்டும். கருணாநிதியும், எம்ஜிஆரும் முதலமைச்சராக இருந்தபோது அண்டை மாநிலங்களுக்குச் சென்று குடிப்பதற்காக தண்ணீர் கேட்டு வந்த வரலாறுகள் உண்டு.

ஆனால் இப்போது உள்ள கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் முதலமைச்சர் கேட்டால் தண்ணீர் தருவார்கள். ஆனால் இப்பொழுதுதான் தமிழ்நாடு முதலமைச்சர் கேரளா முதலமைச்சருக்கு கடிதம் எழுதலாம் என்று யோசித்துள்ளார். இவர் யோசித்து முடிப்பதற்குள் எவ்வளவோ தண்ணீர் பிரச்னை வந்துவிடும்” என்றார்.

Intro:*மழை வந்த பின் தண்ணீர் தருகிறோம் என்று சொல்வதற்கு ஒரு அரசாங்கம் தேவையில்லை*Body:வெங்கடேஷ்வரன்
மதுரை
22.06.2019

*மழை வந்த பின் தண்ணீர் தருகிறோம் என்று சொல்வதற்கு ஒரு அரசாங்கம் தேவையில்லை*

*மதுரை விமான நிலையத்தில் கே.எஸ். அழகிரி செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது;*

அதிமுக அரசின் வருண ஜெபம் என்பது போர்க்களத்தில் இருக்கும் வீரர் துப்பாக்கி இல்லாதது போல் இருக்கிறது. போர்க்களத்திற்கு செல்பவர்கள் துப்பாக்கியுடன் செல்ல வேண்டும். துப்பாக்கி இல்லாமல் போனால் ஒரு போர் வீரரின் நிலை எவ்வளவு பரிதாபமோ அப்படித்தான் தமிழக அரசின் நிலை இருக்கிறது. குடிப்பதற்கு தண்ணீர் கேட்டால் நாங்கள் மழைக்காக வேண்டுகிறோம். மழை வந்த பின் தண்ணீர் தருகிறோம் என்று சொல்வதற்கு ஒரு அரசாங்கம் தேவையில்லை ஒரு அரசாங்கத்தின் இன்றியமையாத கடமையை செய்வதற்கு தவறி இருக்கிறது தமிழ்நாடு அரசாங்கம் அதற்காக இந்த அரசாங்கம் வெட்கப்படவேண்டும்.

அமைச்சர்கள் சொல்கிறார்கள் குடிநீர் பிரச்சினையை அரசியலாக்க கூடாது எப்படி அரசியலாக்க முடியாமல் இருப்போம் நாங்கள் வந்து இவ்வளவு ஏரிகள் வெட்டினோம் இவ்வளவு குளங்கள் வெட்டினோம் மத்திய அரசாங்கத்தின் நிதியை இவ்வாறு பயன்படுத்தினோம் 41 ஆயிரம் ஏரிகளை புணர் அமைத்தோம் ஆனால் தண்ணீர் இல்லை என்று சென்றால் நாங்கள் ஏற்றுக்கொள்வோம் கேரளாவில் முதலமைச்சர் தண்ணீர் கொடுக்க தயார் ஆனால் தண்ணீரை கேட்டுப் பெறுவதற்கு தமிழக முதலமைச்சர் தயாராக இல்லை ஏனென்றால் அவர் வீட்டிற்கு ஒரு நாளைக்கு 4 லாரி தண்ணீர் செல்கிறது அதனால் அவர் கவலைப்பட மாட்டார் ஆனால் மக்களின் சிரமத்தை அவர்களும் சேர்ந்து அனுபவிக்க வேண்டும் அப்போதுதான் அவர்கள் அரசாங்கத்தின் மீது ஒரு நம்பிக்கையை பிறப்பிக்கப்படும் இதேபோன்றுதான் தலைவர் டாக்டர் கலைஞர் முதலமைச்சராக ஆட்சி இருக்கும் பொழுது எம்ஜிஆர் முதலமைச்சராக இருக்கும் பொழுது பக்கத்து மாநிலங்களுக்கு சென்று எல்லா ஒப்பந்தங்களையும் மீறி குடிப்பதற்காக தண்ணீர் கேட்டு வந்த வரலாறுகள் உண்டு ஆனால் இப்போது உள்ள கேரளா ஆந்திரா கர்நாடகா போன்ற மாநிலங்களில் முதலமைச்சர் கேட்டாள் தண்ணீர் தருவார்கள் ஆனால் இப்பொழுதுதான் தமிழக முதலமைச்சர் அவர்கள் கேரளா முதலமைச்சரிடம் கடிதம் எழுதலாம் என்று யோசித்து உள்ளார் இவர் யோசித்து முடிப்பதற்குள் எவ்வளவு தண்ணீர் பிரச்சனை வந்துவிடும் இனிமேல் தண்ணீர் லாரிகளை மக்கள் கைப்பற்றும் நிலை வந்துவிடும்.

சென்னையில் எந்த ஒரு லாரியும் அதன் இலக்கை நோக்கி போவதில்லை வழியிலேயே மறைத்து மக்கள் தண்ணீரைப் பிடித்துக் கொள்கின்றனர் இந்த அரசாங்கம் இப்படி தோல்வியடையும் என நான் எதிர் பார்க்கவில்லை உயர் நீதிமன்றமே சொல்லியிருக்கிறார்கள் அரசாங்கம் எதுவுமே செய்யவில்லை என்று எனவே இதை தமிழக காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது

காலதாமதத்திற்கு அரசாங்கத்திற்கும் எப்பொழுதுமே ஒரு இணைப்பு உண்டு அரசாங்கம் விரைந்து செயல்பட்டால் ஜனங்களுக்கு பிரச்சினையே இல்லை காலதாமதம் என்பதுதான் அரசாங்கத்தின் இலக்கணம் ஆகிவிட்டது ஒரு மாதங்கள் கழித்து பாட புத்தகம் கொடுத்தால் அந்த குழந்தைகள் எப்படி படிப்பார்கள் என்று அந்த அரசாங்கம் யோசிக்க வேண்டும் எனவே இந்த கால தாமதம் கூடாது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

தொகுதி வரையறை என்பது உச்சநீதிமன்றமே முடிவு செய்து மாநில அரசாங்கத்திற்கு தெளிவான விளக்கங்களை உத்தரவுகளை அனுப்பி இருக்கிறார்கள் எனவே இந்த முறையும் வரையறை செய்வதில் இவர்கள் தவறு செய்கிறார்கள் என்றால் இவர்கள் மக்களை மட்டுமல்ல உச்சநீதிமன்றத்தையும் ஏமாற்றுகிறார்கள் என்று பொருள் அதுவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

எங்களுடைய கூட்டணி சுமுகமான கூட்டணி திராவிட முன்னேற்றக் கழக மற்றும் மதசார்பற்ற கூட்டணியுடன் எங்களது கூட்டணி சுமுகமாக செயல்படும் நாங்கள் வருகின்ற 14ம் தேதி மதுரை அல்லது திருநெல்வேலியில் தென் மாவட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் காங்கிரஸ் கட்சி மாநாடு நடத்த இருக்கிறது இந்த மாநாட்டின் மூலமாக உள்ளாட்சிக்கு நாம் எப்படி போட்டியிட வேண்டும் எவ்வாறு கூட்டணி கட்சிகளுடன் செயல்பட வேண்டும் என இறுதிவரை செய்வோம்.

Visual send in ftp
Visual name : TN_MDU_02_22_K.S.ALAGIRI AIRPORT BYTE_TN10003Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.