மதுரை : தமிழ்நாட்டில் திமுக ஆட்சியை கைப்பற்றிய உடன் முந்தைய ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அம்மா உணவங்கள், அம்மா மருந்தங்கள் போன்ற திட்டங்களின் பெயர்கள் மாற்றப்படும் என அதிமுகவினர் அஞ்சினர்.
இதற்கிடையில், திமுக ஆட்சிக்கு வந்த உடன் சென்னை முகப்பேர் பகுதியில் அமைந்திருந்த அம்மா உணவகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டு ஜெயலலிதாவின் உருவப்படங்கள் கிழிக்கப்பட்டன.
இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து அந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். இந்நிலையில் அம்மா உணவங்கள் முன்பு திமுகவினரின் நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டன.
இது அம்மா உணவகம் தானா என்று மக்கள் அறிந்த கொள்ள முடியாதபடி அந்த நோட்டடீஸ்கள் ஒட்டப்பட்டிருந்தன.
இதற்கிடையில், மதுரையில் ஜெய்ஹிந்த்புரத்தில் உள்ள அம்மா உணவகம் ஒன்றில் முன்னாள் முதலமைச்சரும் மறைந்த திமுக தலைவருமான மு.கருணாநிதியின் புகைப்படம் பெயர் பலகையில் திடீரென சேர்க்கப்பட்டது.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் தற்போது அந்தப் பெயர் பலகை தற்போது அலுவலர்களால் நீக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : மதுரை அம்மா உணவகத்தில் கருணாநிதி புகைப்படம்!