ETV Bharat / city

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு அறிக்கையை அரசு வெளியிடாதது சந்தேகத்துக்கு இடமளிக்கிறது... கே.பாலகிருஷ்ணன்... - மாநில அரசு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த அறிக்கையை அரசு வெளியிடாமல் இருப்பது சந்தேகத்திற்கு இடமளிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவ அறிக்கையை வெளியிடாமல் இருப்பது சந்தேகமளிக்கிறது

author img

By

Published : Aug 20, 2022, 5:27 PM IST

மதுரை மகபூப்பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் காம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 'தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. அந்த அறிக்கையில் வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளன.

துப்பாக்கிச் சூடு நடத்த அவசியமில்லாத நிலையலும், குருவிகளை சுடுவது போல மக்களை சுட்டுக் கொன்றுள்ளனர். அதோடு துப்பாக்கிச் சூட்டிற்கும் ஸ்டெர்லைட் நிர்வாகத்திற்கும் சம்பந்தம் இல்லை என்பதும், காவல்துறை அதிகாரிகள் மட்டுமே பொறுப்பு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாக வரும் தகவல்கள் ஏற்புடையதாக இல்லை.

அரசின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் தலையீடும் இருந்திருக்கும். தமிழ்நாடு அரசு தற்போது, இது குறித்த விரிவான அறிக்கையை வெளியிடாமல் இருப்பது சர்ச்சைக்கும், சந்தேகத்திற்கும் இடம் அளிக்கிறது. எனவே, அதற்கான அறிக்கையை வெளியிட்டு சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவ அறிக்கையை வெளியிடாமல் இருப்பது சந்தேகமளிக்கிறது

ஒரு மோசமான வரலாற்றுக்கு முடிவு கட்ட வேண்டும். உயிரிழந்த மக்களுக்கு அப்போது தான் உரிய நியாயம் கிடைக்கும். நேர்மையான, நியாயமான சிபிஐ அதிகாரிகளை நியமித்து விசாரணை நடத்த வேண்டும். குற்றவாளிகள் யாரும் தப்பிக்க விடாதபடி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாநில அரசுகளின் மின்சார ஒப்பந்தங்களில் மத்திய அரசு தலையிட வேண்டிய அவசியம் இல்லை. மத்திய அரசு மாநில அரசுகளை துச்சமாக நினைக்கிறது. மின்சார வாரியத்தை சின்னாபின்னமாக்கி அதை முழுமையாக தனியார் வசம் ஒப்படைக்க நினைக்கிறது.

சீமான் பாஜகவின் பி டீம் போலவே பேசிக் கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டில் திமுக + பாஜக கூட்டணி ஆட்சி தான் நடக்கிறது என சீமான் சொல்வது கற்பனையான பேச்சு தான்" என்றார்.

இதையும் படிங்க: சசிகலா, டிடிவி அதிமுகவில் இணைய வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம்… மனோஜ் பாண்டியன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.