ETV Bharat / city

அஞ்சல் துறையில் தமிழ் புறக்கணிப்பா? - சு. வெங்கடேசன் கண்டனம் - அஞ்சல் துறையில் தமிழ் புறக்கணிப்பு

அஞ்சல் துறைப் படிவங்களில் தமிழ்மொழி அகற்றப்பட்டது கண்டனத்துக்குரியது. உடனடியாக உரிய மாற்றங்களைச் செய்ய வலியுறுத்தி மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் அஞ்சல் பொது மேலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அஞ்சல் துறையில் தமிழ் புறக்கணிப்பு?
அஞ்சல் துறையில் தமிழ் புறக்கணிப்பு?
author img

By

Published : Oct 5, 2021, 12:21 PM IST

மதுரை: இது குறித்து இன்று (அக்டோபர் 5) அவர் எழுதியுள்ள கடிதத்தில், "அஞ்சல் துறையில் பண விடை தமிழில் அச்சடிக்கப்பட்டுவந்தது. ஆனால் மின்னணுப் படிவங்கள் வந்தவுடன் பண விடையில் தமிழுக்கு விடை கொடுக்கப்பட்டுவிட்டது. சேமிப்புகளுக்கான பணம் செலுத்துதல், எடுத்தல் ஆகிய படிவங்களும் தமிழில் இருந்தன; தற்போது இல்லை.

அலைபேசிகளில் தமிழ் எழுத்துகளைப் பதிவிறக்கம் செய்து பெயர்களைப் பதிவுசெய்து கொள்ளுதல் பரவலாக நடைமுறையில் உள்ளது. வணிக நோக்கங்களுக்காகப் பெரிய தனியார் நிறுவனங்கள்கூட தமிழில் உரையாட, தமிழில் செய்தி பரிமாற தொழில்நுட்ப ஏற்பாடுகளைத் தருகிறார்கள்.

அஞ்சல் துறையில் தமிழ் புறக்கணிப்பு?
அஞ்சல் துறையில் தமிழ் புறக்கணிப்பு?

விதிகள், நிபந்தனைகளை வாடிக்கையாளர்கள் அறிந்திருக்க வேண்டும்

ஆனால் ஒரு அரசுத் துறை, சாதாரண மக்களின் இதய நாளமாக விளங்க வேண்டிய துறை மக்கள் சேவை என்ற நோக்கில் இருந்தும் செய்யவில்லை, லாப நோக்கிலும்கூட செய்யவில்லை என்றால் அலட்சியம் என்பதா, பாரபட்சம் என்பதா, திணிப்பு என்பதா?

முதலாவதாக, நமது நாடு மொழிப் பன்மைத்துவம் வாய்ந்தது. அரசு அலுவலகங்கள் இந்தப் பேருண்மையை உள் வாங்கி தங்களை அணுகும் வாடிக்கையாளர்களுக்குச் சேவைகளை எளிதில் பெற வழிவகை செய்ய வேண்டும்.

இரண்டாவதாக, வாடிக்கையாளர்கள் ஒரு சேவையைப் பெறும்போது அதற்கான விதிகளை, நிபந்தனைகளை முழுமையாக அறிந்திருப்பதை உறுதிசெய்ய வேண்டும். அதுவே எந்தவொரு ஒப்பந்தத்தின் அடிப்படைத் தேவையாகும். அவர்கள் அஞ்சல் சேமிப்புகளை எடுக்கும்போது இரு தரப்பிற்கும் உள்ள பொறுப்புகள் தெளிவாய் பகிரப்பட வேண்டும்.

தமிழில் இருப்பதை உறுதி செய்க

இல்லையெனில் பின்னர் சிக்கல்கள் எழும். வாடிக்கையாளர்களே கடைசியில் பலி ஆவார்கள். மூன்றாவது, இந்தி பேசாத மாநிலங்களில் மாநில மொழிகளில் சேவையைத் தருவது ஒன்றிய அரசு நிறுவனங்களின் கடமையாகும்.

அஞ்சல் துறையில் தமிழ் புறக்கணிப்பு?
அஞ்சல் துறையில் தமிழ் புறக்கணிப்பு?

சாதாரண குடிமகன் வழக்கு விவரங்களைத் தெரிந்துகொள்ளும் சூழல் உருவாக்கப்படுவதே நீதி வழங்கல் முறைமை மீது நம்பிக்கையை உருவாக்கும் என்பது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா கருத்தின் சாரம். அதனை உங்களின் பார்வைக்குக் கொண்டுவருகிறேன்.

அஞ்சல் துறையில் தமிழ் புறக்கணிப்பு?
அஞ்சல் துறையில் தமிழ் புறக்கணிப்பு?

எனவே வாடிக்கையாளர் சேவை தொடர்பான எல்லா படிவங்களும் - பண விடை, சேமிப்புகளுக்கான பணம் செலுத்துதல், எடுத்தல் ஆகிய படிவங்கள் உள்பட - தமிழில் இருப்பதையும், அதற்கேற்ற தொழில்நுட்ப ஏற்பாட்டை இணைய வழியில் தருவதையும் உறுதிசெய்ய வேண்டுகிறேன். இந்தக் கோரிக்கை உடனடியாக நிறைவேற்றப்படுமென்று நம்புகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: மாநிலங்களவையில் சராசரி வருகைப்பதிவேடு 78% - ஆய்வில் தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.