மதுரை: வாடிப்பட்டி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகள் அனைத்திலும் அதிமுக வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
9ஆவது வார்டில் திமுக சார்பில் முன்னாள் பேரூராட்சித் தலைவர் கிருஷ்ணவேணியும், அதிமுக சார்பில் இந்திராணியும் நேரடியாகப் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் அதிமுக வேட்பாளர் இந்திராணியை திமுகவினர் கடத்தி விட்டதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இன்று(பிப்.07) வாடிப்பட்டி பேருந்து நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கடத்தப்பட்டதாக கூறப்பட்ட இந்திராணி, பத்திரிகையாளர்களை சந்தித்து நேரடியாகப் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், 'தன்னை திமுகவினரோ அல்லது வேறு சிலரோ கடத்தவில்லை.
என்னுடைய கணவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தாலும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட முடியாது என்பதாலும் எனது வேட்புமனுவை சுய நினைவோடு திரும்பப் பெற்று உள்ளேன்’ என்றார்.
இதையும் படிங்க: தேர்தலில் நின்றால் ஈனம் மானம் பார்க்கக் கூடாது - உடன்பிறப்புகளுக்கு அமைச்சர் அறிவுரை