ETV Bharat / city

வழக்கறிஞர்கள் கருப்பு அங்கி அணிந்து போராட இடைக்கால தடை - உயர் நீதிமன்ற மதுரை கிளை

author img

By

Published : Dec 23, 2020, 7:06 PM IST

Updated : Dec 24, 2020, 3:28 PM IST

வழக்கறிஞர்கள் கருப்பு அங்கி மற்றும் கழுத்து பட்டை அணிந்து போராட்டங்களில் ஈடுபட உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.

interim ban to Lawyers
interim ban to Lawyers

மதுரை: திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தியன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அம்மனுவில், வழக்கறிஞர்கள் அவர்களுக்கென பார்கவுன்சில் நிர்ணயித்துள்ள வழிமுறை படிதான் ஆடையணிந்து, நீதிமன்ற பணிக்கு வர வேண்டும். சில வழக்கறிஞர்கள் அந்த வழிமுறைகளைப் பின்பற்றுவதில்லை. சரியான முறையில் ஆடை அணிந்து நீதிமன்ற பணிக்கு வருவது வழக்கறிஞர்களின் கடமையாகும்.

ஆண், பெண் வழக்கறிஞர்களுக்கென, தனித்தனியாக ஆடை வழி முறைகளை பார்கவுன்சில் வகுத்துள்ளது. சில வழக்கறிஞர்கள் டி-ஷர்ட், ஜீன்ஸ் பேண்ட், பட்டு சேலை அணிந்து நீதிமன்றம் வருகின்றனர். மேலும், கருப்பு அங்கி, வெள்ளைக் கழுத்துப் பட்டை அணிந்து வழக்கறிஞர் பலர் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டதில் ஈடுபடுகின்றனர். இதனால் வழக்கறிஞர் தொழிலுக்கு அவப்பெயர் உண்டாகும் நிலை ஏற்படுகின்றது.

எனவே, அனைத்து வழக்கறிஞர்களும் நீதிமன்ற பணியின்போது முறையாக ஆடை அணிய வேண்டும். ஆர்ப்பாட்டம், போராட்டகளின் போது கருப்பு அங்கி, கழுத்து பட்டை அணிய கூடாது என உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு, வழக்கறிஞர்கள் கருப்பு அங்கி, வெள்ளைக் கழுத்து பட்டை அணிந்து போராட்டங்களில் ஈடுபட இடைக்கால தடை விதித்தனர். தொடர்ந்து வழக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: பழமை வாய்ந்த கெங்கையம்மன் கோயில் தேர் திருவிழா: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

Last Updated : Dec 24, 2020, 3:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.