மதுரை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த வீரப்ப மொய்லி, ”திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை மிரட்டுவதற்காக மத்திய அரசு வருமான வரித்துறையை சோதனை என்ற பெயரில் ஏவி வருகிறது. இதுபோன்றவற்றால் எதிர்க்கட்சிகளை முடக்கி விடலாம் என நினைக்கிறார்கள். ஆனால், மக்களிடையே இது அதிருப்தியைத் தான் ஏற்படுத்தும். வரும் மார்ச் 28 ஆம் தேதி நடைபெற உள்ள தேர்தல் பரப்புரையில் ராகுல் காந்தி கலந்து கொள்கிறார்.
விலை ஏற்றத்தை சந்தித்து வரும் பெட்ரோல் டீசல் விலை உயர்வை மத்திய அரசு கட்டுப்படுத்த தவறி விட்டது. மத்திய அரசின் சுங்கவரி, கலால் வரி மற்றும் இதர வரிகளுடன் மாநில அரசின் வரிகளும் சேர்ந்து பொதுமக்களை கஷ்டப்படுத்தி வருகின்றன. கடந்த ஆறு ஆண்டுகளில் மத்திய அரசின் இது போன்ற வரி விதிப்பால், 23 லட்சம் கோடி மக்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. முந்தைய காங்கிரஸ் அரசு அனைத்து விலைவாசி களையும் கட்டுக்குள் வைத்திருந்தது” என்றார்.
தொடர்ந்து, கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட ரூ.75 கோடி நிதி ஒதுக்கியுள்ளது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, அதுகுறித்து பதிலளிக்க விரும்பவில்லை எனக்கூறி, கர்நாடக முன்னாள் முதலமைச்சர் வீரப்பமொய்லி புறப்பட்டுச் சென்றார்.
இதையும் படிங்க: தாமரையை மலரச் செய்வோம் - பாஜக அறிவுசார் பிரிவு ஆலோசனைக் கூட்டம்