மதுரை ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் நாகராஜன் தலைமையில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் போக்குவரத்து காவலர்கள் ஆகியோர், மதுரையில் இயங்கும் 500-க்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தனர்.
பள்ளி வாகனங்களில் அவசர வழி, தீயணைப்பு கருவிகள், முதலுதவி பெட்டிகள், வாகனங்களின் ஆவணங்கள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் பள்ளி வாகனங்களில் சிக்கியுள்ள குழந்தைகளை அவசர காலத்தில் எவ்வாறு மீட்பது என்பது குறித்தும் தீயணைப்புத்துறை காவலர்களால் விளக்கம் அளிக்கப்பட்டது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் நாகராஜன் கூறியதாவது, "மதுரையில் 1389 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட உள்ளன. பள்ளி வாகனம் ஆய்வு செய்யப்பட்டு சரியாக இருந்தால் போக்குவரத்துத்துறை தரப்பில் ஓகே என்கிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வாகனம் அனுப்பி வைக்கப்பட்டது" என்றார்.