தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிற்கு அடுத்தபடியாக ஏராளமான ரசிகர்களை உள்ளடக்கியது மாட்டுவண்டி பந்தயப் போட்டியாகும். இதற்காக காளைகளை தனிகவனத்துடன் காளை உரிமையாளர்கள் வளர்த்துவருகின்றனர். மதுரை மாவட்டம் மேலூரில் மாட்டுவண்டி பந்தய உரிமையாளர்கள் ஏராளாமானோர் உள்ளனர்.
இதற்காக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து பந்தய மாட்டு வண்டிகள் வந்திருந்தன. மூன்று சுற்றுகளாக பந்தயமானது நடைபெற்றது. பெரியமாடு பிரிவில் முதல் சுற்றும், சிறிய மேடு பிரிவில் இரண்டு சுற்றுகளாக நடைபெற்றது.
மதுரை மாவட்டம் முழுவதிலும் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட காளை மாடுகள் பந்தயத்தில் கலந்துகொண்டு பந்தய தூரத்தினை கடந்து சீறிப்பாய்ந்தன.
முதல் பரிசை வென்ற பல்லவராயன்பட்டி வர்ஷா என்பவரது மாட்டுவண்டி 30 ஆயிரம் ரூபாயும், சின்னமாட்டு பிரிவில் முதல் பரிசை வென்ற கம்பம் போதுராஜா என்பவரது மாட்டு வண்டி 25 ஆயிரம் ரொக்கப்பரிசும் பெற்றன. அத்துடன் கேடயங்களும் வழங்கப்பட்டன.
இதுதவிர இரண்டு, மூன்றாம் இடம்பிடித்த மாட்டு வண்டிகளின் சாரதிகளுக்கும் ஏராளாமான ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன.