ETV Bharat / city

ஃப்ரீ பையர் ஆன்லைன் விளையாட்டு தடை செய்யப்பட்ட பிறகும் எவ்வாறு ஆன்லைனில் கிடைக்கிறது - நீதிபதி

author img

By

Published : Sep 13, 2022, 9:33 PM IST

ஃப்ரீ பையர் ஆன்லைன் விளையாட்டு தடை செய்யப்பட்ட பிறகும் எவ்வாறு ஆன்லைனில் கிடைக்கிறது என்றும்; தடை செய்யப்பட்ட விளையாட்டுகள் ஆன்லைனில் கிடைக்காமல் இருப்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும் எனவும் நீதிபதி அரசிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஃப்ரீ பையர் ஆன்லைன் விளையாட்டு தடை செய்யப்பட்ட பிறகும் எவ்வாறு ஆன்லைனில் கிடைக்கிறது- நீதிபதி

மதுரை: நாகர்கோவிலைச் சேர்ந்த அயறின் அமுதா உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், ”எனது மகள் இதழ் வில்சன், நாகர்கோவில் உள்ள தனியார் கல்லூரியில் இளநிலை பட்டம் படித்து வருகிறார். இந்நிலையில் எனது மகள் கடந்த ஆறாம் தேதி முதல் காணவில்லை. இது குறித்து கன்னியாகுமரி வடசேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். ஆனலும் காவல்துறையினர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனது மகள் பப்ஜி மற்றும் ஃப்ரீ பையர் ஆகிய ஆன்லைன் விளையாட்டில் அதிக ஆர்வமுடன் இருந்ததால், இதன் மூலம் என் மகளுக்கு ஜெப்ரின் என்பவன் பழக்கமாகி உள்ளான். எனவே, அவன்தான் அவனது நண்பருடன் எனது மகளை கடத்தியிருக்க வேண்டும். எனவே, எனது மகளை மீட்டுத் தர காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்” என மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி மகாதேவன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நீதிபதி, 'இந்திய அரசால் ஆன்லைன் விளையாட்டுகளான ஃப்ரீ பையர் தடை செய்யப்பட்டுவிட்டது; இருந்தபோதும் இந்த விளையாட்டை எவ்வாறு மீண்டும் விளையாட முடிகிறது.

தடை செய்யப்பட்ட விளையாட்டுகள் ஆன்லைனில் கிடைக்காமல் இருப்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினர் இதுகுறித்து என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்கள், ஏன் கடும் நடவடிக்கை எடுக்கவில்லை' என்று கேள்வி எழுப்பிய நீதிபதி இதுகுறித்து விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக்கூறி வழக்கு விசாரணையினை ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: 100 சவரன் நகைகள், 5 ஏக்கர் நிலம் கொடுத்தும் வரதட்சணை கொடுமை; உயிரை மாய்த்த மனைவி: கணவருக்கு 10ஆண்டுகள் சிறை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.