ETV Bharat / city

ஒவ்வோரு காக்கி சட்டைகாரரையும் பாதுகாக்க வேண்டும் - உயர் நீதிமன்ற மதுரை கிளை - police

மதுரை: சட்டப்படிக் கடமைகளை நிறைவேற்றும் காவல் துறையினரை மிரட்டும் நபர்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

உயர் நீதிமன்ற மதுரை கிளை
author img

By

Published : Jul 12, 2019, 8:58 PM IST

சிவகங்கை தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பொன்ரகு, சார்பு ஆய்வாளர் ஞானசேகரன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க அம்மாவட்ட எஸ்.பிக்கு உத்தரவிடக் கோரி சந்திரன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.

இதனை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம், "தமிழ்நாட்டில் வழக்குப்பதிவு செய்யும் காவல் துறை அலுவலர்களை, உயர் அலுவலர்களிடம் புகார் செய்வதாகவும், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதாகவும் மிரட்டும் போக்கு அதிகமாக உள்ளது. வழக்கில் தொடர்புள்ளவர்களும், அவர்களின் உறவினர்களும் இந்த செயல்களில் ஈடுபடுகின்றனர்.

வழக்குப்பதிவு செய்வதில் விதி மீறல் இருந்தால் மட்டுமே அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட முடியும். காவல்துறையினர்களுக்கு குறிப்பிட்ட பணி நேரம் கிடையாது. மன அழுத்தத்தில் வேலை பார்க்கும் அவர்களை நீதிமன்றம், காவல்துறை
உயர் அலுவலர்கள், பொதுமக்கள் பாதுகாக்க வேண்டும்.

சட்டப்படியான கடமைகளை நிறைவேற்றும் காவல் துறையினரை மிரட்டும் நபர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். இதுபோன்ற கெட்ட நோக்கத்துடன் வழக்கு தொடரும் வழக்காடிகளை நீதிமன்றம் பொறுத்துக் கொள்ளக்கூடாது. பணி விதிகள்படி பணி செய்ய மறுக்கும் அரசு ஊழியர்கள் மீது ரிட் மனு அடிப்படையில் நடவடிக்கை எடுக்கலாம். அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்கள் நடத்தை விதியை மீறியுள்ளாரா என்பதை பார்க்க வேண்டும். குற்ற வழக்குகளில் தொடர்புள்ளவர்கள் உள்நோக்கத்துடன், வெற்றுக் காரணங்களுடன் காவல்துறையினரை மிரட்டும் வகையில் தாக்கல் செய்யும் மனுக்களை அதிகபட்ச அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்.

நேர்மையான காவல்துறை அலுவலர்கள் காப்பாற்றத் தவறினால் அவர்களின் பணித்திறன் பாதிக்கப்படும். நேர்மையான அலுவலர்களுக்கு விருது கொடுத்து பாராட்டினால் அவர்கள் பொதுமக்கள் எதிர்பார்க்கும் அளவில் தங்கள் கடமைகளை நிறைவேற்றுவார்கள். நேர்மையான காவல் துறை அலுவலர்களை ஊக்கப்படுத்துவதில் காட்டும் ஆர்வம், ஊழல் காவல்துறை மீது நடவடிக்கை எடுப்பதிலும் இருக்க வேண்டும்.

இந்த வழக்கில் மனுதாரருக்கும், அவரது சகோதரர்களுக்கும் இடையிலான சொத்து பிரச்னை, அடிதடியில் முடிந்துள்ளது. இதனால் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை மனுதாரர் சட்டப்படி சந்திக்க வேண்டும். இதனால் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது" என உத்தரவிட்டுள்ளார்.

Intro:நேர்மையான காவல்துறை அதிகாரிகளை ஊக்கப்படுத்துவதில் காட்டும் ஆர்வம், ஊழல் காவல்துறை மீது நடவடிக்கை எடுப்பதிலும் இருக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

மன அழுத்தத்தில் உள்ள காவல் துறை அதிகாரிகளை நீதிமன்றம், காவல்துறை
உயர் அதிகாரிகள், பொதுமக்கள் பாதுகாக்க வேண்டும்.
சட்டப்படியான கடமைகளை நிறைவேற்றும் காவல்துறையினரை மிரட்டும் நபர்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை Body:நேர்மையான காவல்துறை அதிகாரிகளை ஊக்கப்படுத்துவதில் காட்டும் ஆர்வம், ஊழல் காவல்துறை மீது நடவடிக்கை எடுப்பதிலும் இருக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

மன அழுத்தத்தில் உள்ள காவல் துறை அதிகாரிகளை நீதிமன்றம், காவல்துறை
உயர் அதிகாரிகள், பொதுமக்கள் பாதுகாக்க வேண்டும்.
சட்டப்படியான கடமைகளை நிறைவேற்றும் காவல்துறையினரை மிரட்டும் நபர்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

சிவகங்கை தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பொன்ரகு, சார்பு ஆய்வாளர் ஞானசேகரன் ஆகியோர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க சிவகங்கை எஸ்பிக்கு உத்தரவிடக்கோரி சந்திரன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.

இதனை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் ,"தமிழகத்தில் வழக்கு பதிவு செய்யும் காவல்துறை அதிகாரிகளை உயர் அதிகாரிகளிடம் புகார் செய்வதாகவும், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதாகவும் மிரட்டும் போக்கு அதிகமாக உள்ளது. வழக்கில் தொடர்புள்ளவர்களும், அவர்களின் உறவினர்களும் இந்த செயல்களில் ஈடுபடுகின்றனர்.
குற்ற வழக்கில் தொடர்புள்ளவர்களின் இதுபோன்ற நடவடிக்கைகளை நீதிமன்றம் ஊக்குவிக்காது. வழக்கில் உண்மையும், சூழ்நிலையும் முக்கியம். வழக்கு பதிவு செய்வதில் விதி மீறல் இருந்தால் மட்டுமே அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட முடியும். விதிமீறல் இல்லாத நிலையில் காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட முடியாது.
அரசு ஊழியர்கள், காவல் துறை அதிகாரிகள் சட்டப்படி வரையறுக்கப்பட்ட தங்களது பொறுப்பு மற்றும் கடமைகளை நிறைவேற்றவிட வேண்டும். காவல்துறையினரை மறைமுகமாக மிரட்டும் வகையில் உயர் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன. பொய்யான தகவல்களுடன் வழக்கு தொடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவல்துறையினர் மன அழுத்தத்தில் பணிபுரிகின்றனர் என்பதில் சந்தேகம் இல்லை. காவல்துறையினர் 365 நாட்களும் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு குறிப்பிட்ட பணி நேரம் கிடையாது. மன அழுத்தத்தில் உள்ள காவல் துறை அதிகாரிகளை நீதிமன்றம், காவல்துறை
உயர் அதிகாரிகள், பொதுமக்கள் பாதுகாக்க வேண்டும்.
சட்டப்படியான கடமைகளை நிறைவேற்றும் காவல்துறையினரை மிரட்டும் நபர்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். இதுபோன்ற கெட்ட நோக்கத்துடன் வழக்கு தொடரும் வழக்காடிகளை நீதிமன்றம் பொறுத்துக்கொள்ளக்கூடாது. பணி விதிகள் படி பணி செய்ய மறுக்கும் அரசு ஊழியர்கள் மீது ரிட் மனு அடிப்படையில் நடவடிக்க எடுக்கலாம். அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்கள் நடத்தை விதியை மீறியுள்ளாரா என்பதை பார்க்க வேண்டும். குற்ற வழக்குகளில் தொடர்புள்ளவர்கள் உள்நோக்கத்துடன், வெற்றுக் காரணங்களுடன் காவல்துறையினரை மிரட்டும் வகையில் தாக்கல் செய்யும் மனுக்களை அதிகபட்ச அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்.

நேர்மையான காவல்துறை அதிகாரிகளை காப்பாற்றத் தவறினால் அவர்களின் பணித்திறன் பாதிக்கப்படும்.
நேர்மையான அதிகாரிகளுக்கு விருது கொடுத்து பாராட்டினால் அவர்கள் பொதுமக்கள் எதிர்பார்க்கும் அளவில் தங்கள் கடமைகளை நிறைவேற்றுவார்கள். நேர்மையான காவல்துறை அதிகாரிகளை ஊக்கப்படுத்துவதில் காட்டும் ஆர்வம், ஊழல் காவல்துறை மீது நடவடிக்கை எடுப்பதிலும் இருக்க வேண்டும்.

இந்த வழக்கில் மனுதாரருக்கும், அவரது சகோதரர்களுக்கும் இடையிலான சொத்து பிரச்சினை, அடிதடியில் முடிந்துள்ளது. இதனால் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை மனுதாரர் சட்டப்படி சந்திக்க வேண்டும். இதனால் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது" என உத்தரவிட்டுள்ளார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.