ETV Bharat / city

போடி கல்லூரி முறைகேடு: உயர் கல்வித் துறை பதிலளிக்க உத்தரவு - High Court verdict on Bodi CPA college abuse

மதுரை: சி.பி.ஏ. கல்லூரியில் முறைகேடுகள் நடப்பதாகக் கூறி தாக்கல்செய்திருந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை, உயர் கல்வித் துறை செயலர் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்து வழக்கை ஒத்திவைத்துள்ளது.

போடி சிபிஏ கல்லூரியில் முறைகேடு
போடி சிபிஏ கல்லூரியில் முறைகேடு
author img

By

Published : Jan 28, 2020, 7:16 AM IST

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரைச் சேர்ந்த ஏலத்தோட்ட விவசாயி முருகன் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல்செய்திருந்தார்.

அதில், "போடியில் ஏலத் தோட்ட விவசாயிகள் சங்கம் சார்பில் கல்லூரி (சி.பி.ஏ. கல்லூரி) ஒன்று நடத்தப்பட்டுவருகிறது. இந்தக் கல்லூரியானது மதுரை காமராஜர் பல்கலைக்கழக மானியக்குழுவின் 100 விழுக்காடு நிதியுதவியுடன் செயல்பட்டுவருகிறது. கல்லூரியில் பணியாற்றும் முதல்வர், பேராசிரியர்கள், பணியாளர்கள் உள்பட அனைவருக்கும் அரசுதான் சம்பளம் வழங்கிவருகிறது.

ஆனால் இந்தக் கல்லூரியை நிர்வகித்து வருபவர்கள், ஊழியர்கள் பணியிடம் நிரப்புவதில் முறைகேடுகளில் ஈடுபட்டுவருகின்றனர். 2015, 2016ஆம் ஆண்டுகளில் கல்லூரியில் பணியாளர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்துள்ளன. இது குறித்து தேனி மாவட்ட குற்றப்பிரிவில் பல வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு நிலுவையில் உள்ளன" என்று குறிப்பிட்டிருந்தார்.

உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

மேலும், "தற்போது 14 உதவிப் பேராசிரியர், முதல்வர் பணியிடத்திற்கு ஜனவரி 28ஆம் நாள் (இன்று) நேர்முகத் தேர்வு நடத்தப்பட உள்ளதாக நாளிதழில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்தப் பணியிடங்களுக்கு மறைமுகமாக ஆள்கள் தேர்வுசெய்யப்பட்டு அவர்களுக்கு உறுதியும் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதன்மூலம் 5.6 கோடி ரூபாய் வரை கையூட்டு பெறப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதனால் பணி நியமனத்தை தடைசெய்து, இது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்கள் பதிலளிக்க உத்தரவிட வேண்டும். பணி நியமனங்கள் குறித்து லஞ்சம், ஊழல் தடுப்புத் துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இது குறித்து விசாரித்த அவர்கள், பணியிடம் நிரப்புதல் குறித்து உயர் கல்வித் துறை செயலர் பதிலளிக்க வேண்டும் என்றும், மேலும் பணியிடம் நிரப்புதல் முடிவுகள் நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பிற்குள்பட்டது எனவும் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளனர்.

இதையும் படிங்க:
90 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த ரயில்வே பட்ஜெட்!

Intro:போடி ஏலத் தோட்ட விவசாயிகள் கல்லூரியில் உதவி பேராசிரியர்கள், மற்றும் முதல்வர் பணி நியமனத்திற்கு தடை விதிக்க கோரிய வழக்கில், பணியிடம் நிரப்புதல் குறித்து உயர் கல்விதுறை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு, மேலும் பணியிடம் நிரப்புதல் முடிவுகள் நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பிற்கு உட்பட்டது என உயர் நீதி மன்ற மதுரைக் கிளை உத்தரவு.Body:போடி ஏலத் தோட்ட விவசாயிகள் கல்லூரியில் உதவி பேராசிரியர்கள், மற்றும் முதல்வர் பணி நியமனத்திற்கு தடை விதிக்க கோரிய வழக்கில், பணியிடம் நிரப்புதல் குறித்து உயர் கல்விதுறை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு, மேலும் பணியிடம் நிரப்புதல் முடிவுகள் நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பிற்கு உட்பட்டது என உயர் நீதி மன்ற மதுரைக் கிளை உத்தரவு.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரைச் சேர்ந்த முருகன் உயர் நீதி மன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

நான் ஏலத் தோட்ட விவசாயியாக உள்ளேன். எங்கள் ஊரில் ஏலத் தோட்ட விவசாயிகள் சங்கம் சார்பில் கல்லூரி நடத்தப்பட்டு வருகிறது.
இந்த கல்லூரி முழுவதும் மதுரை காமராஜர் பல்கலை மானியக் குழுவின் 100 சதவீத நிதியுதவியுடன் செயல் பட்டு வருகிறது.. முதல்வர், பேராசிரியர்கள், பணியாளர்கள் உட்பட அனைவருக்கும் அரசு தான் சம்பளம் வழங்கி வருகிறது.
ஆனால் இந்தக் கல்லூரியை நிர்வகித்து வருபவர்கள், ஊழியர்கள் பணியிடம் நிரப்புவதில் முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2015 மற்றும் 2016 ம் ஆண்டுகளில் கல்லூரியில் பணியாளர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்துள்ளன. இது குறித்து தேனி மாவட்ட குற்றப் பிரிவில் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், தற்போது 14 உதவிப் பேராசிரியர், மற்றும் முதல்வர் பணியிடத்திற்கு நாளை (28.1.2020) நேர்முகத் தேர்வு நடத்தப் பட உள்ளதாக நாளிதழில் விளம்பரப் படுத்தப்பட்டுள்ளன.ஆனால் இந்த பணியிடங்களுக்கு மறைமுகமாக ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு உறுதியும் வழங்கப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் 5.6 கோடி ரூபாய் வரை லஞ்சமாக பெறப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.எனவே பணி நியமனத்தை தடை செய்து,
நியமனம் குறித்து அதிகாரிகள் பதிலளிக்க உத்தரவிட வேண்டும், மேலும் பணி நியமனங்கள் குறித்து லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்புத் துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது,அப்போது பணியிடம் நிரப்புதல் குறித்து உயர் கல்விதுறை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு, மேலும் பணியிடம் நிரப்புதல் முடிவுகள் நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பிற்கு உட்பட்டது என உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்துள்ளனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.