ETV Bharat / city

மறுதேர்தல் நடத்தக்கோரி வழக்கு: தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு - மதுரை உயர் நீதிமன்றத்தில் திமுக மனு

மதுரை: விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியக் குழுத் தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கு மறு தேர்தல் நடத்த உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கில், மாநிலத் தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Madurai high court latest
Madurai high court latest
author img

By

Published : Jan 14, 2020, 8:14 AM IST

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த காளீஸ்வரி என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில், "நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நரிக்குடி ஒன்றிய பஞ்சாயத்தில் 14 வார்டுகள் உள்ளன. அதில் மூன்றாவது வார்டு கவுன்சிலராகத் திமுகவைச் சேர்ந்த நான் வெற்றிபெற்று ஒன்றியக் குழுத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டேன். என்னை எதிர்த்து அதிமுகவைச் சேர்ந்த பஞ்சவர்ணம் என்பவர் போட்டியிட்டார்.

இதைத் தொடர்ந்து தேர்தல் நடைபெற்றது, அதில் இருவரும் சமமாக, ஏழு வாக்குகள் பெற்றோம். எனவே, குலுக்கல் முறையில் ஒன்றியக் குழுத் தலைவர் தேர்வு செய்யப்பட வேண்டும். ஆனால் அப்போது, தேர்தல் அலுவலகத்தில் அதிமுகவைச் சேர்ந்த 14ஆவது வார்டு கவுன்சிலர் ரவிச்சந்திரன் திடீரென்று தேர்தல் நடந்த அறையில் கலவரத்தில் ஈடுபட்டார்.

மேலும், அவரது ஆதரவாளர்களைத் தூண்டிவிட்டு ஒன்றிய அலுவலகத்தில் உள்ள பொருள்களைச் சூறையாடினார். மேலும் பாதுகாப்புப் பணியிலிருந்த அருப்புக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளரையும் தாக்கினார்கள், இதில் அவர் காயமடைந்தார். இவை அனைத்தும் ஒன்றிய அலுவலகத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

எனவே, நரிக்குடி ஒன்றியக் குழுத் தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கு மறு தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும். மேலும், தேர்தலைக் கண்காணிக்க வழக்கறிஞர் குழு ஒன்றை அமைத்து, கண்காணிப்புப் படக்கருவி மூலம் தேர்தல் நடக்கும் அறை, ஒன்றிய அலுவலகம் முழுவதும் பதிவுசெய்ய உத்தரவிட வேண்டும்" என மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு இன்று நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது, அப்போது வழக்கு தொடர்பாக தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 22ஆம் தேதி ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: கூட்டுறவு சங்கத்தின் இடைக்கால தடையை நீக்கக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு

Intro:விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றிய தலைவர் மற்றும் துணை தலைவர் பதவிக்கு மறு தேர்தல் நடத்த உத்தரவிட கோரிய வழக்கு..

மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு..Body:விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றிய தலைவர் மற்றும் துணை தலைவர் பதவிக்கு மறு தேர்தல் நடத்த உத்தரவிட கோரிய வழக்கு..

மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு..

அதிமுகவினரே தேர்தல் அலுவலகத்தில் உள்ள கணினி மற்றும் பொருட்கள் சூறையாடினார்கள் மேலும் பாதுகாப்பில் இருந்த அருப்புக்கோட்டை காவல் துறை துணை கண்காணிப்பாளரையும் தாக்கினார்கள் - மனு தார்ர் குற்றச்சாட்டு

விருதுநகர் மாவட்டதை சேர்ந்த காளீஸ்வரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனு செய்திருந்தார்.

அதில் "நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் நரிக்குடி ஒன்றிய பஞ்சாயத்து 14 வார்டுகள் உள்ளது.அதில் 3 வது வார்டு கவுன்சிலராக தி.மு.க.வை சேர்ந்த நான் வெற்றி பெற்று ஒன்றிய தலைவர் பதவிக்கு போட்டியிட்டேன். என்னை எதிர்த்து அ.தி.மு.க.வை சேர்ந்த பஞ்சவர்ணம் என்பவர் போட்டியிட்டார்.

இதை தொடர்ந்து தேர்தல் நடைபெற்றது, அதில் இருவருக்கும் சமமாக 7 வாக்குகள் பெற்றோம்.இந்நிலையில் குலுக்கல் முறையில் சேர்மன் தேர்வு செய்ய வேண்டும்.

ஆனால் தேர்தல் அலுவலகத்தில்
அ.தி.மு.க.வை சேர்ந்த 14 வது வார்டு கவுன்சிலர் ரவிச்சந்திரன் திடீர் என தேர்தல் நடந்த அறையில் கலவரத்தில் ஈடுபட்டார்.

அவரது ஆதரவாளர்களை தூண்டிவிட்டு யூனியன் அலுவலகத்தில் உள்ள கணினி பொருட்கள் சூறையாடினார்கள் மேலும் பாதுகாப்பு பணியில் இருந்த அருப்புக்கோட்டை காவல் டி.எஸ்.பி.யை தாக்கினார்கள்,அதில் டி.எஸ்.பி காயமடைந்தார். இவை அனைத்தும் யூனியன் அலுவலகத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது.

எனவே நரிக்குடி யூனியன் சேர்மன் மற்றும் உதவி சேர்மன் பதவிக்கு மறு தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் மேலும் தேர்தலை கண்காணிக்க வழக்கறிஞர் குழு அமைத்து, வீடியோ கேமரா மூலம் தேர்தல் நடக்கும் அறை மற்றும் யூனியன் அலுவலகம் முழுவதும் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு இன்று நீதிபதிகள் துரைசுவாமி,ரவீந்திரன் அமர்வில் விசாரணைக்கு வந்தது, அப்போது வழக்கு தொடர்பாக தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 22 ம் தேதி ஒத்திவைத்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.