ETV Bharat / city

மதுரையில் மெட்ரோ ரயில் - அரசிடம் விளக்க பெற நீதிமன்றம் உத்தரவு - மதுரைக்கு மெட்ரோ ரயில்

மதுரை: மதுரை ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, அங்கு மெட்ரோ ரெயில் சேவை திட்டத்தை அமல்படுத்திட உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கோரிய மனு மீதான விசாரணையில் மத்திய, மாநில அரசுகளிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வழக்கறிஞர்களுக்கு உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது

metro train for madurai
மதுரைக்கு மெட்ரோ ரயில் கோரி மனு
author img

By

Published : Feb 9, 2021, 9:05 PM IST

மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் பொது நல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், டெல்லி மெட்ரோ ரெயில் சேவை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கி நடந்து வருகிறது. 20 லட்சம் மக்கள் இந்த சேவையை பயண்படுத்தி வருகின்றனர்.

இந்த மெட்ரோ ரயில் சேவை இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கு அடுத்தபடியாக பல முக்கிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவையானது பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

தற்போது தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய மாநகரமாக மதுரை இருக்கிறது. சென்னையைப் போல் போக்குவரத்து நெருக்கடியாலும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ள நகர் என்று பெயரும் மதுரைக்கு உண்டு.

சென்னையைத் தொடர்ந்து கோவையில் 'மெட்ரோ ரயில் திட்டம்' அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், மதுரையில் இத்திட்டத்தை அறிவிப்பதில் மத்திய, மாநில அரசுகள் தாமதம் காட்டி வருவது தென்தமிழ்நாடு மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தைத் தந்திருக்கிறது.

மதுரை மாநகர் தற்போது அருகிலுள்ள புறநகர் பகுதிகளான திருமங்கலம், மேலூர், பெருங்குடி, நாகமலை புதுக்கோட்டை வரையிலும் குடியிருப்பு பகுதிகளால் விரிவடைந்துள்ளது. பேருந்து போக்குவரத்தை மட்டுமே நம்பிக்கிடக்கிற மதுரையில் ‘மெட்ரோ ரயில் திட்டம்’ வாக்குறுதியாக மட்டுமே இருக்கிறது. இத்திட்டத்தை நிறைவேற்றிட தொடர்ந்து பல்வேறு தரப்புகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை மெட்ரோ ரயிலுக்கான பாதை திருமங்கலத்தில் தொடங்கி, எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் தோப்பூர், கரடிக்கல் புதிய பஸ்போர்ட், திருநகர், திருப்பரங்குன்றம், பெரியார் பஸ்நிலையம், ரயில் நிலையம், யானைக்கல், கோரிப்பாளையம், தல்லாகுளம், மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட், ஐகோர்ட் கிளை வழியாக மேலூர் வரை அமைக்கலாம்.

இதுதவிர, திருப்புவனத்திலிருந்து, காமராஜர் பல்கலைக்கழகம் மற்றும் ஐ.டி. பார்க் செக்கானூரணி வரை என இரு வழித்தடங்களில் ரயில் இயக்கலாம். இதற்கான திட்டம் பொறியியல் வல்லுநர்களால் ஆய்வுக்கு உட்படுத்தி ஏற்கப்பட்டுள்ளது.

எனவே மதுரை நகரில் இருக்கும் போக்குவரத்து நெரிசல்களை கருத்தில் கொண்டு, மெட்ரோ ரெயில் சேவை திட்டத்தை அமல் படுத்திட உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனுவில் கூறியுள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் சுந்தரேஷ், ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் கோரிக்கை குறித்து, மத்திய, மாநில அரசுகளிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வழக்கறிஞர்களுக்கு உத்தரவிட்டனர். பின்னர் இந்த வழக்கின் விசாரணையை மார்ச் 2ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

இதையும் படிங்க: ராமேஸ்வரம் - மதுரை இடையே பயணிகள் ரயில் மார்ச் முதல் இயக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.