ETV Bharat / city

பள்ளிக்கல்வித்துறையில் நடக்கும் தவறுகள் குறித்து விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு - மதுரை செய்திகள்

அரசின் துறைகளில் குறிப்பாக பள்ளி நடவடிக்கைகள் குறித்து விசாரிக்க போதுமான அளவில் காவல்துறையினரை ஒதுக்க தமிழ்நாடு காவல்துறை தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரைக்கிளை
மதுரைக்கிளை
author img

By

Published : Apr 28, 2022, 7:55 AM IST

மதுரை: பள்ளிக்கல்வித்துறையின் குரூப் A மற்றும் குரூப் B அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும். அது அவர்களின் பணிப்பதிவேட்டில் குறிப்பிடப்பட வேண்டும். முறைகேடுகள் இருப்பது உறுதி செய்யப்பட்டால் விதிகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை எச்சரித்துள்ளது.

டேவிட் லியோ தனக்கு வழங்கப்பட்ட இடமாறுதல் உத்தரவை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு நேற்று (ஏப்.27) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, பள்ளிக்கல்வித்துறையில் நடக்கும் முறைகெடுகளைக் கண்டுபிடிக்கவும் அவற்றைத் தடுக்கவும் வேண்டும் எனகுறிப்பிட்டுள்ளார். அவர் பிறப்பித்த உத்தரவில்,

* லஞ்ச ஒழிப்புத் துறையினர் போதுமான எண்ணிக்கையில் அதிகாரிகளைக் கொண்ட சிறப்பு குழுக்களை அமைத்து தரவுகளை உரிய முறையில் சேகரித்து ஊழலில் ஈடுபடும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* அரசின் துறைகளில் குறிப்பாக பள்ளி கல்வித்துறையில் நடைபெறும் ஊழல் நடவடிக்கைகள் குறித்து விசாரிக்க போதுமான அளவில் காவல்துறையினரை ஒதுக்க தமிழ்நாடு காவல்துறை தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* உயரதிகாரிகள் குறிப்பாக பள்ளிக்கல்வித்துறையின் குரூப் A மற்றும் குரூப் B அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும். அது அவர்களின் பணிப்பதிவேட்டில் குறிப்பிடப்பட வேண்டும். முறைகேடுகள் இருப்பது உறுதி செய்யப்பட்டால் விதிகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

* பல்வேறு ஆசிரியர் கூட்டமைப்புகளின் அலுவலர்கள் மற்றும் நிர்வாகிகளின் சொத்துக்கள் குறித்தும் தகவல்கள் சேகரிக்கப்பட வேண்டும். இதுவும் பள்ளிக்கல்வித்துறையின் ஊழல்களை குறைக்க பெருமளவில் உதவும்.

* ஊழல் முறைகேடுகள் தொடர்பாக புகார்கள் ஏற்பட்டால் அவை குறித்த விவரங்களை முறையாக சேகரித்து ஊழலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டால் விதிகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

பின்னர், இந்த வழக்கை பொறுத்தவரை மனுதாரரின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

இதையும் படிங்க: ஓலைச்சுவடிகளைப் பாதுகாக்க கோரிய வழக்கு: தமிழ் வளர்ச்சித் துறை செயலர் பதிலளிக்க உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.