ETV Bharat / city

தனிநபரின் வங்கிக் கணக்கிலிருந்து 2.5 லட்சம் திருடிய ஹேக்கர்! - Hacking in madurai

மதுரை : தனிநபரின் வங்கிக் கணக்கிலிருந்து 2.5 லட்சம் ரூபாயை அடையாளம் தெரியாத நபர் ஹேக் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hacker thefted 2.5 Lakhs from an individual account

author img

By

Published : Jun 23, 2020, 6:26 PM IST

மதுரை தல்லாகுளத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவருக்கு சின்ன சொக்கிகுளம் அருகேயுள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கணக்கு உள்ளது. இந்நிலையில் மாரியப்பன் நேற்று சின்ன சொக்கிகுளம் வங்கிக்கு சென்று, தனது வங்கி கணக்கில் 2.5 லட்சம் ரூபாயைக் காணவில்லை என்று புகார் தெரிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த வங்கி அலுவலர்கள், மாரியப்பனின் வங்கிக் கணக்கை ஆய்வு செய்து பார்த்தனர். அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மாரியப்பனின் கணக்கை ஹேக் செய்து, வங்கி ரசீதில் (செலான்) கையெழுத்தைப் பதிவு செய்து, அதன் மூலம் 2.5 லட்சம் ரூவாயை அபகரித்துச் சென்றது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மண்டல மேலாளர் ராமானுஜம், தல்லாகுளம் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் செய்தார். இதன் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க : ’நெட்வொர்க் ரொம்ப ஸ்லோவா இருக்கு’ - புகார் தெரிவிக்கும் ஜியோ பயனர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.