மதுரை: பார்க் டவுன் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி. இவரது மனைவி சர்மிளா தேவி (29). இவர் கடந்த ஆறு மாதங்களாக வயிறு வீக்கம், வயிற்று வலி காரணமாக மிகவும் அவதிப்பட்டு வந்தார். இதனையடுத்து, அவர் மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவ பரிசோதனையில் 30க்கு 30 செ.மீ., அளவில் சினைப்பை நீர்கட்டி ஒன்று அவரது வயிற்றில் இருந்தது. சினைப்பை நீர்கட்டி என்பது சினைமுட்டைகள் வெளிவராத காரணத்தால் ஏற்படுகிறது. இந்த கட்டியால் அப்பெண் அவதிபட்டு வந்தது தெரியவந்தது.
மருத்துவர்கள் சாதனை
இதனையடுத்து, மகப்பேறியல் மருத்துவத் துறை தலைவர் சுமதி, இணைப்பேராசிரியர் சுதா, மருத்துவர் ஜோஸ் பின், மயக்கவியல் மருத்துவ துறை தலைவர் செல்வகுமார், மருத்துவர் சுதர்ஸன் ஆகியோர் சேர்ந்து அறுவைச் சிகிச்சை மூலம் சுமார் 7 கிலோ எடை கொண்ட கட்டியை அகற்றினர்.
இந்த சிக்கலான அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து சாதனை படைத்த மருத்துவக் குழுவிற்கு, மருத்துவக் கல்லூரி முதல்வர் இரத்தினவேல் பாராட்டு தெரிவித்தார்.
இதையும் படிங்க: வயிற்றில் பஞ்சு வைத்து தைத்த தனியார் மருத்துவமனை..!