மதுரை: தமிழ்நாட்டில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு செப்.1ஆம் தேதி முதல் நேரடியாகவும் ஆன்லைன் மூலமும் வகுப்புகளும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், சில பள்ளிகளில் மாணவர்கள் கட்டாயமாக நேரடி வகுப்பிற்கு வரவேண்டும் எனக் கட்டாயப்படுத்துகின்றனர் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையில் நீதிபதிகள் மாணவர்களைப் பள்ளிக்கு வரக் கட்டாயப்படுத்தும் பள்ளிகள் குறித்த தகவல்களை மனுதாரர் அளித்தால், அந்தப் பள்ளிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிவித்தனர்.