ETV Bharat / city

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை - நீதிமன்றத்தில் அரசு உறுதி! - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

மதுரை: 7.5% ஒதுக்கீட்டின் கீழ் இடம் கிடைத்தும் கட்டணம் செலுத்த இயலாமல் வாய்ப்பை தவறவிட்ட அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கக் கோரிய வழக்கில் தரவரிசை அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

hc
hc
author img

By

Published : Dec 1, 2020, 6:14 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த லதா என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், " எனது மகள் அரசுப் பள்ளியில் பயின்று நல்ல மதிப்பெண்களுடன் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, நவம்பர் 18 ஆம் தேதி நடைபெற்ற மருத்துவக் கலந்தாய்வில் கலந்து கொண்டார். அவருக்கு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மருத்துவ இடம் கிடைத்த நிலையில், ஐந்து லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் கட்டணமாக செலுத்தக் கூறினர்.

மேலும், ஒவ்வொரு ஆண்டும் 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் எனவும் தெரிவித்தனர். ஏழ்மையான குடும்பச் சூழலில் அவ்வளவு தொகையை கட்டணமாக செலுத்துவது இயலாது என்பதால் எவ்வித இடத்தையும் தேர்வு செய்யவில்லை. அதன்பின்னரே அரசுப்பள்ளி மருத்துவ மாணவர்களின் முழு கட்டணத்தையும் ஏற்பதாக அரசு அறிவித்தது. இது முன்பே தெரிந்திருந்தால் மருத்துவ இடத்தை எனது மகள் தேர்வு செய்திருப்பார். ஆகவே 7.5% ஒதுக்கீட்டின் கீழ் இடம் கிடைத்து கட்டணம் செலுத்த இயலாமல் வாய்ப்பை தவறவிட்ட அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, மீண்டும் வாய்ப்பளித்து மருத்துவ இடம் கொடுக்க உத்தரவிட வேண்டும் " எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், " அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்படாமல் ஒருவேளை இடங்கள் திருப்பி அளிக்கப்படும் பட்சத்திலும், காலியிடம் ஏற்படும் போதும், இந்த மாணவர்களுக்கு தரவரிசை அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்படும் " எனத் தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: பல்கலைக்கழகங்கள் வெளியிட்ட அரியர் தேர்வு முடிவுகளுக்கு இடைக்கால தடை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.