மதுரை: ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மதுரை மேயர், சட்டப்பேரவை உறுப்பினர்கள், கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது காலணி வீசப்பட்டது. ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு அரசின் சார்பில் அஞ்சலி செலுத்திய பிறகு, பாஜகவினர் அஞ்சலி செலுத்த வேண்டும் என்று கூறியதால் அங்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு அமைச்சர் புறப்பட்டபோது, விமான நிலையத்தின் நுழைவு வாயிலில் அவரின் கார் மீது பாஜகவினர் காலணியை எறிந்தனர். இதையடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனடியாக அவர்களை அப்புறப்படுத்திய பின் அமைச்சரின் கார் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இதையும் படிங்க: மதுரை வந்த ராணுவ வீரரின் உடல் ...அமைச்சர், மாவட்ட ஆட்சியர் அஞ்சலி