மதுரை மாவட்டம், கள்ளழகர் மலைப்பகுதியில் திருக்கோயில் தீயணைப்புத் துறையினரால் வனப்பகுதியில் தீத்தடுப்பு ஒத்திகை நடைபெற்றது. தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநர் சைலேந்திரபாபு அறிவுறுத்தலின்படி வனப்பகுதிகளில் ஏற்படும் காட்டுத்தீயை அணைப்பது தொடர்பாக மதுரை மாவட்டத்தில் 20 கமாண்டோ வீரர்களுக்கு கள்ளழகர் திருக்கோயில் வனப்பகுதியில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் இவர்கள் வனப்பகுதியில் ஏற்படும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக வனத்துறையினருடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். கள்ளழகர் திருக்கோயில் பணியாளர்களுக்கு வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டால் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து ஒத்திகை பயிற்சி அளிக்கப்பட்டது.
மேலும் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை கமாண்டோ வீரர்கள், வனத்துறையினர், கல்லூரி மாணவர்கள், என்சிசி, என்எஸ்எஸ் மாணவர்கள் அடங்கிய நூறு பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டு இவர்களுக்கு பிப்ரவரி 1ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை காட்டுத்தீயை ஆரம்ப கட்டத்திலேயே எவ்வாறு தடுப்பது என்பது குறித்து பயிற்சி வழங்கப்படவுள்ளது.
’மாற்றம் 2021இல் மறுபடியும் மாறும்' - உ.பி.க்களை உசுப்பிவிட்ட அழகிரியின் பிறந்தநாள் சுவரொட்டி!