ETV Bharat / city

மதுரையில் மகனின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் மெழுகுசிலை வைத்த தந்தை! - மெழுகு சிலைகள்

உடல்நலக்குறைவால் உயிரிழந்த மகனுக்கு, அவரது முதலாம் ஆண்டு நினைவு நாளில், ரூ.6 லட்சம் செலவில், ஆளுயர மெழுகுசிலை வைத்து மரியாதை செலுத்திய தந்தையின் பாசம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Wax_statue
Wax_statue
author img

By

Published : Nov 18, 2020, 3:53 PM IST

Updated : Nov 18, 2020, 6:45 PM IST

மதுரை: மதுரை மாவட்டம் அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் S. முருகேசன் M.சரஸ்வதி தம்பதியர். இவர்களுக்கு, சுதா, கீதா ஆகிய மகள்களும், மாரிகணேஷ் என்ற மகனும் உள்ளனர். இதில் கடைசி பிள்ளையான மாரிகணேஷ்க்கு 10 வருடங்களுக்கு முன்னர் திருமணம் முடிந்து, மகன், மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

மாரிகணேஷ் சிறுவயது முதலே வீட்டில் உள்ள பெற்றோர், சகோதரிகள் மீது அதீத அன்பு செலுத்தியுள்ளனர். சிறுவயதிலிருந்தே புல்லட் பைக் ரேசராக இருந்த மாரிகணேஷ் பதக்கங்கள், விருதுகளும் பெற்றதோடு பல்வேறு போட்டிகளில் முதலிடத்தையும் பிடித்துள்ளார்.

கடந்த ஆண்டு உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு நவ.18 ஆம் தேதி மாரிகணேஷ் உயிரிழந்தார்.

மகனுக்கு மெழுகுசிலை தந்தை வைத்த

இந்நிலையில் மாரிகணேஷின் முதலாமாண்டு நினைவு தினத்தில், அவரது தந்தை முருகேசன் சுமார் ரூ.6 லட்சம் செலவில், மகனின் தத்ரூபமாக மெழுகு சிலை செய்து, அவர்களுக்குச் சொந்தமான திருமண மண்டபத்தில் நிறுவியுள்ளார்.

தனது ஒரே செல்ல மகனை இழந்த நிலையில், அவரது உருவச் சிலையை நிறுவிய மகனை நினைவுகூர்ந்த தந்தையின் பாசம் உறவினர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: காணாமல்போன ஆட்டின் தலையுடன் புகாரளித்த உரிமையாளர்!

Last Updated : Nov 18, 2020, 6:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.