ETV Bharat / city

ஸ்ரீரங்கம் கோவிலை சுற்றி ஆக்கிரமிப்பு? அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலை சுற்றி 9 மீட்டர் உயரத்திற்கு மேல் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்ற கோரிய வழக்கில் விரிவான நிலை அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றக் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது

உயர்நீதிமன்றக் மதுரைக்கிளை
உயர்நீதிமன்றக் மதுரைக்கிளை
author img

By

Published : Sep 19, 2022, 10:41 PM IST

கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்த மகுடேஸ்வரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு பொதுநல மனுவினை தாக்கல் செய்துயிருந்தார்.

அதில் தமிழகத்தில் பழமையான கோவில்கள், கோபுரங்கள் உள்ள பகுதிகளில் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவிற்குள் 9 மீட்டர் உயரத்திற்கு மேல் கட்டங்களை கட்ட கூடாது, என விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது. ஆனால் திருச்சி, ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி கோவில்யை சுற்றி உள்ள பகுதிகளில் அரசாணையை மதிக்காமல் சட்ட விரோதமாக கட்டிடங்கள் கட்டி உள்ளனர்.

அரசாணையை மீறி அப்பகுதியில் 73 கட்டிடங்கள் 9 மீட்டர் உயரத்திற்கு மேல் கோயில்யில் இருந்து 100 மீட்டர்க்குள் கட்டப்பட்டுள்ளது. கோயில் அருகே அமைந்துள்ள உத்தர வீதி ,சித்திர வீதிகளில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது.

எனவே விதிமீறி கட்டபட்டுள்ள கட்டிடங்களை ஆய்வு செய்து அகற்ற கோரி வழக்கறிஞர் ஆணையாளரை நியமனம் செய்யவும் மனுவில் கோரியிருந்தார். வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்யநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அந்த இடங்களில் இடங்களில் கட்டிடங்கள் கட்டுவதற்கு அனுமதி வழங்கியது யார் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் , வழக்கு குறித்து விரிவான நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்திவைதனர்.

இதையும் படிங்க: பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் அரசு இரட்டைக்கொள்கையை கையாள்கிறதா? - திருமாவளவன் எம்.பி.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.