மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் விரிவாக்க கட்டடத்தில் எதிரே இயங்கிவரும் கரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனையில், தற்போது 60க்கும் மேற்பட்டோர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவனியாபுரம் சின்ன உடைப்பு, ஆஸ்டின்பட்டி தனியார் கல்லூரி ஆகிய இரண்டு தீவிரக்கண்காணிப்பு முகாம்களில் 500-க்கும் மேற்பட்டோர் சுகாதாரத்துறையினரின் தீவிரக் கண்காணிப்பின் கீழ் உள்ளனர்.
மதுரை பல்நோக்கு அரசு மருத்துவமனையில் கரோனா சிறப்பு சிகிச்சைப் பெற்று வரும் பல்வேறு நபர்கள் தற்போது குணமாகி வீடு திரும்பி வருகின்றனர். இந்நிலையில் நேற்று மட்டும் 8 பேர் இந்த மருத்துவமனையிலிருந்து குணமாகி வீடு திரும்பினர். அதில் மதுரை மாநகர் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்தவரும் உதவி ஆய்வாளர் ஒருவரும் உள்ளடங்குவர்.
மதுரை கரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனையில் நேற்று சிகிச்சைப் பெற்று வீடு திரும்பிய 8 பேரில் சிலர், விருதுநகர் மாவட்டம் - கன்னிசேரி மற்றும் செட்டிகுறிச்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். மதுரை மருத்துவமனையில் மட்டும் இதுவரை 64 பேர் பூரண குணம் அடைந்து உள்ளனர். தற்போது 55 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இதையும் படிங்க: