ETV Bharat / city

ஏரோநாட்டிக்கல் படிப்புக்கு கல்விக் கடன் கிடையாது... ஆதிதிராவிட நலத்துறை செயலருக்கு நோட்டீஸ்! - educational loan rejected

மதுரை: வானூர்தி பொறியியல் (Aeronautical Engineering) படிப்புக்கு கல்விக் கடன் வழங்கக் கோரிய வழக்கில் ஆதிதிராவிட நலத்துறை செயலரை நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கில் சேர்ப்பதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.

high court madurai bench
author img

By

Published : Sep 21, 2019, 10:32 PM IST

மதுரையைச் சேர்ந்த காயத்ரி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், “பன்னிரண்டாம் வகுப்பு முடித்து 2017இல் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் வானூர்தி பொறியியல் படிப்பில் சேர்ந்தேன். நான் ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் 2017-18 கல்வி ஆண்டுக்கு கல்வி உதவித்தொகை கிடைக்கும் என நம்பினேன். ஆனால், கல்வி உதவித்தொகை கிடைக்கவில்லை.

இதையடுத்து, கல்விக்கடன் கேட்டு ஒத்தக்கடை பாரத ஸ்டேட் வங்கியில் விண்ணப்பித்தேன். எனது விண்ணப்பத்தை நிராகரித்து வங்கி அலுவலர் உத்தரவிட்டார். என் தந்தைக்கு போதுமான சிபில் ஸ்கோர் இல்லை, இதனால் கல்விக் கடன் வழங்க முடியாது என வங்கி அலுவலர்கள் தெரிவித்தனர்.

இதனால் என்னைக் கல்லூரியிலிருந்து நீக்கினர். கல்விக் கடன் கிடைக்காததால் வானூர்தி பொறியாளராவது கனவாகவே மாறிவிடும் நிலை உள்ளது. எனவே எனக்கு கல்விக் கடன் வழங்க உத்தரவிட வேண்டும்" என கோரியிருந்தார். இம்மனுவை விசாரித்த நீதிபதி எம்.சுந்தர், வழக்கில் ஆதிதிராவிட நலத்துறைச் செயலரை நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கில் சேர்ப்பதாக உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

Intro:விமான பொறியாளராக கல்விக் கடன் வழங்கக் கோரிய வழக்கில் ஆதிதிராவிட நலத்துறை செயலருக்கு நோட்டீஸ்

விமான பொறியாளராக கல்விக் கடன் வழங்க கோரிய வழக்கில் ஆதிதிராவிட நலத்துறை செயலரை நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கில் சேர்ப்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. சிபில் ஸ்கோரை காரணமாக கூறி வங்கியில் கடன் வழங்கவில்லை என மனுதாரர் புகார்
Body:விமான பொறியாளராக கல்விக் கடன் வழங்கக் கோரிய வழக்கில் ஆதிதிராவிட நலத்துறை செயலருக்கு நோட்டீஸ்

விமான பொறியாளராக கல்விக் கடன் வழங்க கோரிய வழக்கில் ஆதிதிராவிட நலத்துறை செயலரை நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கில் சேர்ப்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. சிபில் ஸ்கோரை காரணமாக கூறி வங்கியில் கடன் வழங்கவில்லை என மனுதாரர் புகார்

மதுரையைச் சேர்ந்த காயத்ரி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,"பிளஸ் 2 முடித்து 2017-ல் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் படிப்பில் சேர்ந்தேன். நான் ஆதிதிராவிட வகுப்பை சேர்ந்தவர் என்பதால் 2017- 2018 கல்வி ஆண்டுக்கு கல்வி உதவித் தொகை கிடைக்கும் என நம்பினேன். ஆனால் கல்வி உதவித் தொகை கிடைக்கவில்லை. இதையடுத்து கல்வி கடன் கேட்டு ஒத்தக்கடை எஸ்பிஐ வங்கியி-ல் விண்ணப்பித்தேன். எனது விண்ணப்பத்தை நிராகரித்து வங்கி அதிகாரி உத்தரவிட்டார்.

என் தந்தைக்கு போதுமான சிபில் ஸ்கோர் இல்லை, இதனால் கல்வி கடன் வழங்க முடியாது என வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் என்னை கல்லூரியில் இருந்து நீக்கினர். கல்வி கடன் கிடைக்காததால் விமான பொறியாளராவது கனவாகவே மாறிவிடும் நிலை உள்ளது. எனவே எனக்கு கல்வி கடன் வழங்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.சுந்தர், வழக்கில் ஆதிதிராவிட நலத்துறை செயலரை நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கில் சேர்ப்பதாக உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.