ETV Bharat / city

25 ஆண்டு உழைப்பு: சீட் கிடைக்காத திமுகவினர் கருணாநிதி சிலையிடம் மனு

மதுரை மாநகராட்சியில் போட்டியிட சீட் கிடைக்காத திமுக நிர்வாகிகள் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலைக்கு மனு கொடுத்து தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

seats in the local body election
சீட் கிடைக்காத திமுகவினர்
author img

By

Published : Feb 4, 2022, 10:08 AM IST

மதுரை: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் களம் பரபரப்பாக உள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், தற்போதுவரை அரசியல் கட்சியினரிடையே இடப்பங்கீடு, கூட்டணிப் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

அனைத்துக் கட்சிகளும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்துவருகின்றன. மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுவரும் நிலையில், திமுகவிலும், பாஜகவிலும் வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுவருகின்றனர்.

கருணாநிதி சிலைக்கு மனு

இந்நிலையில் அதிமுகவில் சீட் கேட்டு கிடைக்காமல் அதிருப்தியில் இருக்கும் முன்னாள் கவுன்சிலர்கள் பாஜகவில் சேர்ந்துவருகின்றனர். இதற்கிடையே மதுரை மாவட்டத்தில் திமுகவினருக்கு அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, மாவட்டச் செயலாளர்கள் பொன். முத்துராமலிங்கம், தளபதி ஆகியோர் வேட்பாளர்களைத் தேர்வுசெய்து இடங்களை ஒதுக்கிவருகின்றனர்.

திமுக மாவட்டச் செயலாளர்கள் ஒரு சீட் கூட ஒதுக்காத காரணத்தால் கூட்டணியில் உள்ள மனிதநேய மக்கள் கட்சி, விசிக வெளியேறின. இந்நிலையில் மதுரை மாநகராட்சியில் போட்டியிட சீட் கிடைக்காத திமுக நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்துவருகின்றனர்.

குறிப்பாக மதுரை மாநகராட்சி 32ஆவது வார்டைச் சேர்ந்த கலையரசி, 27ஆவது வார்டைச் சேர்ந்த ராஜேந்திரன், 28ஆவது வார்டைச் சேர்ந்த சரசு, 24ஆவது வார்டைச் சேர்ந்த முத்துமணி ஆகியோர் திமுகவில் 25 ஆண்டுகாலமாக கட்சிக்கு உழைத்தும் சீட் கேட்டும் தங்களுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை.

திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் பொன். முத்துராமலிங்கம் தனது மருமகள், உறவினர்களுக்கு வார்டை ஒதுக்கி புறக்கணிப்பதாக குற்றச்சாட்டு தெரிவித்து, சிம்மக்கல் பகுதியில் உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலைக்கு மனு கொடுத்து தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

திமுக மாவட்டச் செயலாளர்கள் கட்சியை அழிவுப்பாதைக்கு கொண்டுசெல்வதாகவும், கட்சிக்கு உழைத்தவர்கள் ஓரங்கட்டப்படுவதாகவும் குற்றஞ்சாட்டினர்.

இதையும் படிங்க: வாய்ப்பு மறுத்த திமுக: சுயேச்சையாகக் களமிறங்கிய ஐஏஎஸ் மாணவி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.