ETV Bharat / city

நீர்நிலைகளில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்

மதுரை: நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட மதுரை மாவட்ட ஆட்சியர் வினய், திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள நிலையூர் கண்மாயை பார்வையிட்டார்.

ஆட்சியர் வினய், திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள நிலையூர் கண்மாயை பார்வையிட்டார்
ஆட்சியர் வினய், திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள நிலையூர் கண்மாயை பார்வையிட்டார்
author img

By

Published : Feb 8, 2020, 3:47 PM IST

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள விவசாயத்திற்கு முக்கிய நீர் ஆதாரமாக நிலையூர் கண்மாய் மற்றும் தென்கால் கண்மாய் அமைந்துள்ளது. இதில் நிலையூர் கண்மாய் கூத்தியார்குண்டு, கப்பலூர், ஹார்விபட்டி, நிலையூர், பெருங்குடி, சாமநத்தம் போன்ற கிராம விவசாயத்திற்கு நீர் ஆதாரமாக திகழ்கிறது.

இந்த நிலையூர் கண்மாய் 22 அடி உயரமும், 375 ஏக்கர் பரப்பளவு மற்றும் 18 கிலோமீட்டர் சுற்றளவு கொண்டுள்ளது. ஆனால் தற்போது ஆக்கிரமிப்பு காரணமாக கண்மாயின் சுற்றளவு 12 கிலோமீட்டர் மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது. பலமுறை ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமல் இருந்துவந்தது.

இந்நிலையில் மதுரை நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது அதைத் தொடர்ந்து இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் தலைமையில், வருவாய் துறை அலுவலர்கள் மதுரை நிலையூர் கண்மாயில் ஆய்வு மேற்கொண்டனர்.

நிலையூர் கண்மாயை பார்வையிட்ட ஆட்சியர் வினய்

தொடர்ந்து கூத்தியார்குண்டு பகுதியில் உள்ள பெரிய மடையில் இருந்து கண்மாய்க்குள் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். தற்போது மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டதால் அப்பகுதி மக்கள் விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று எதிர்பார்த்திருக்கின்றனர்.

இதையும் படிங்க:

அரசு அலுவலகங்களில் ஆட்சியர் திடீர் விசிட்: பீதியில் அலுவலர்கள்

Intro:*நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து மதுரை நிலையூர் கண்மாயை மாவட்ட ஆட்சியர் வினய் ஆய்வு*Body:*நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து மதுரை நிலையூர் கண்மாயை மாவட்ட ஆட்சியர் வினய் ஆய்வு*

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள விவசாயத்திற்கும் முக்கிய நீர் ஆதாரமாக நிலையூர் கண்மாய் மற்றும் தென்கால் கண்மாய் அமைந்துள்ளது.

இதில் நிலையூர் கண்மாய் 22 அடி உயரமும், 375 ஏக்கர் பரப்பளவு மற்றும் 18 கிலோமீட்டர் சுற்றளவு கொண்டுள்ளது. ஆனால் தற்போது ஆக்கிரமிப்பு காரணமாக கண்மாயின் சுற்றளவு 12 கிலோமீட்டர் மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையூர் கண்மாய் கூத்தியார்குண்டு, கப்பலூர், ஹார்விபட்டி, நிலையூர், பெருங்குடி, சாமநத்தம் போன்ற கிராம விவசாயத்திற்கு நீர் ஆதாரமாக திகழ்கிறது.

மதுரை நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் தலைமையில், வருவாய்துறை அதிகாரிகள் மதுரை நிலையூர் கண்மாயில் ஆய்வு மேற்கொண்டனர்.

தொடர்ந்து கூத்தியார்குண்டு பகுதியில் உள்ள பெரிய மடையில் இருந்து கண்மாய்க்குள் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படமால் இருந்து வந்ததது.

இந்த நிலையில் மாவட்ட ஆட்சியரின் ஆய்வினால் அப்பகுதி மக்கள் விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தற்போது ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று எதிர்பார்த்து வருகின்றனர்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.