ETV Bharat / city

ஜல்லிக்கட்டில் கூட்ட நெரிசல்: மயக்கமடைந்த பார்வையாளர் மரணம் - கூட்ட நெரிசலில் மயக்கமடைந்த பார்வையாளர் தீடிர் மரணம்

மதுரை:  அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை காணச்சென்ற பார்வையாளர் திடீரென மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் கூட்ட நெரிசலில் மயக்கமடைந்த நபர் மரணம்

author img

By

Published : Jan 17, 2020, 4:56 PM IST

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று (ஜன.17) கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இதில் 700 காளைகள், 800 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கின்றனர். ஜல்லிக்கட்டுப் போட்டியைக் காண்பதற்காக பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் நேற்று இரவிலிருந்தே அலங்காநல்லூர் கிராமத்திற்கு வருகைதந்தனர்.

ஜல்லிக்கட்டை பார்வையிட செக்காணூரணி பகுதியைச் சேர்ந்த செல்லப்பாண்டி (35) என்பவரும் சென்றுள்ளார். கூட்ட நெரிசலில் அமர்ந்து பார்த்துகொண்டிருந்த அவர் திடீரென்று மயக்கமடைந்தார். பின்னர் அருகில் இருந்தவர்கள் அவரை அலங்கநல்லூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில் அவர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு இராசாசி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் கூட்ட நெரிசலில் மயக்கமடைந்த நபர் மரணம்

இந்நிலையில் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலியே அவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் அவரது உடலை உடற்கூறாய்வுக்காக மதுரை அரசு இராசாசி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:

ஜல்லிக்கட்டு: காளையை அழைத்துவந்த இளைஞர் உயிரிழந்த சோகம்

Intro:Body:*அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இரண்டாவது பலி*

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை பார்வையிட செக்காணூரணியை சேர்ந்த ஊத்துப்பட்டி. மாயாண்டி மகன் செல்லப்பாண்டி (35) டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வருகிறார்.
இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளன.

செல்லபாண்டி ஜல்லிக்கட்டு பார்க அலங்காநல்லூர் வந்துள்ளார்.

இந்த நிலையில் கீழே விழுந்தது அவர்
மயக்கமடைந்த, தொடர்ந்து சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியில் இறந்துள்ளார். அவரது உடல் உடற்கூறு பரிசோதனைக்கு மதுரை அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறைக்கு கொண்டு சென்றுள்ளனர்Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.