ETV Bharat / city

குடந்தை மருத்துவமனையில் சிறப்பு மருத்துவர்களை நியமிக்க உத்தரவு! - சிறப்பு மருத்துவர்கள்

மதுரை: கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிறப்பு மருத்துவர்களை நியமிக்கவும், எம்.ஆர்.ஐ மற்றும் சி.டி.ஸ்கேன் போன்ற வசதிகளை அமைக்கவும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

hospital
hospital
author img

By

Published : Dec 9, 2020, 2:37 PM IST

கும்பகோணத்தை சேர்ந்த கண்ணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செத மனுவில், " கும்பகோணம் அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லாமல், குறிப்பாக இருதய மருத்துவர், நரம்பியல் மருத்துவர் மற்றும் எலும்பு முறிவு மருத்துவர் இல்லாமல் உள்ளனர். மேலும் விபத்து காலங்களில் உயிர்காக்கும் கருவிகளும் இல்லாமல், ஏராளமானோர் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. மேலும் இங்கு சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ.ஸ்கேன் போன்ற வசதிகளும் இல்லை.

இதனால் நெஞ்சுவலி, விபத்து போன்ற அவசரங்களுக்கு வருவோர் மேல் சிகிச்சைக்காக, ஒன்றரை மணி நேர பயணித்து தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால் பல உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. எனவே இந்த மருத்துவமனையில் சிறப்பு மருத்துவர்களை நியமிக்க உத்தரவிடுவதோடு, சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ.ஸ்கேன் போன்ற வசதிகளையும் ஏற்படுத்த ஆணையிட வேண்டும் “ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு இன்று நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தஞ்சாவூரில் மருத்துவக்கல்லூரியும், மருத்துவமனையும் அமைந்துவிட்ட பிறகு, கும்பகோணம் மருத்துவமனையில் மனுதாரர் கோரிய வசதிகளை ஏற்படுத்தித் தர மருத்துவ நலப்பணி இயக்குநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.

இதையும் படிங்க: பண விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பிரபல மருத்துவமனை மருத்துவர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.