ETV Bharat / city

பாலியல் தொல்லை வழக்கு: எதிர் தரப்புக்கு ஆதரவாக பாதிக்கப்பட்ட பெண் தாக்கல் செய்த மனு தள்ளுபடி! - நீதிமன்ற செய்திகள்

மதுரை மாநகராட்சி பள்ளியில் பாலியல் குற்றச்சாட்டில் வழக்கில் சிக்கிய ஆசிரியருக்கு ஆதரவாக பாதிக்கபட்ட மாணவி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

corporation school teacher sexual harassment case

author img

By

Published : Oct 28, 2021, 10:43 PM IST

மதுரை: ஆரப்பாளையம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆங்கில ஆசிரியர் ஒருவர், பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மதுரை தெற்கு அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ஆசிரியரை கைது செய்தனர்.

இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி ஜெயசந்திரன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஏற்கனவே மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, வழக்கின் விசாரணையை முடித்து 3 மாதத்திற்குள் குற்றப் பத்திரிக்கையை விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், பாதிக்கப்பட்டதாக கூறபட்ட மாணவி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், சம்பந்தப்பட்ட ஆசிரியர் எந்த தவறிலும் ஈடுபடவில்லை. அவர் மீதான புகாரை எனது தந்தை அப்போதே திரும்ப பெற்றார். சம்பந்தப்பட்டவர்களே புகார் அளிக்காத போது, தொடர்பில்லாத ஒரு நபரால் எப்படி வழக்கு தொடர முடியும். எனவே, அவரது புகாரின் அடிப்படையிலான வழக்கை எனது வாக்குமூலத்தின் அடிப்படையில் முடிக்க வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜி.இளங்கோவன் முன் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் அன்புநிதி ஆஜராகி, பாலியல் புகாரின் அடிப்படையில் தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மாணவி தனது ஆட்சேபத்தை விசாரணை அலுவலரிடம் தான் தெரிவிக்க வேண்டும்.

விசாரணையின் தன்மையை பொறுத்து வழக்கை தொடர்வதா, கைவிடுவதா என்பதை விசாரணை அலுவலர் தான் முடிவு செய்ய முடியும். நேரடியாக ஐகோர்ட்டில் மனு செய்ய முடியாது என வாதிட்டார். அரசு தரப்பு வாதத்தை ஏற்ற நீதிபதி, மாணவியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: யார் இந்த ஜம்தாரா கொள்ளையர்கள்? - பயிற்சி பெற்று சைபர் மோசடியில் ஈடுபடும் ஊர் மக்கள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.