ETV Bharat / city

கரூர் காவிரி ஆற்றுப் பகுதியில் மணல் குவாரிகள் அமைப்பது தொடர்பான திட்டவரைவு வழக்கு முடித்துவைப்பு - சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை

கரூர்: காவிரி ஆற்றுப் பகுதியில் ஐந்து இடங்களில் புதிய மணல் குவாரிகள் அமைத்து அதில் இரண்டு இடங்களில் லாரிகள் பயன்படுத்துவது, மூன்று இடங்களில் மாட்டுவண்டிகள் பயன்படுத்துவது குறித்து திட்ட வரைவு அனுமதிக்காக காத்திருப்பில் உள்ளது என்ற அரசுத் தரப்பு விளக்கத்தை ஏற்ற சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டுள்ளது.

MDU
MDU
author img

By

Published : Dec 7, 2020, 3:44 PM IST

கரூர் பகுதியைச் சேர்ந்த தினேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல்செய்த மனுவில், "காவிரி ஆற்றுப் பகுதியில் சட்டவிரோதமாக லாரிகள் பல மணல் திருட்டில் ஈடுபட்டுவந்தன. உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவின்படி மணல் திருட்டுகள் தடுக்கப்பட்டு காவிரி ஆற்றிலிருந்து எடுக்கப்படும் மணல்களை இரண்டு விற்பனை நிலையங்கள் அமைத்து ஆன்லைன் மூலம் பதிவுசெய்து விற்பனையானது நடைபெற்றுவருகிறது.

ஆன்லைன் மூலம் பதிவுசெய்பவர்கள் மணல் எடுக்கவரும் லாரி பதிவு எண்ணை பதிவுசெய்து மணல்களைப் பொதுமக்கள் பெற்றுவருகின்றனர். இதில் மாட்டுவண்டிகள் மூலம் மணல் எடுப்பதற்கு அனுமதி தரவில்லை.

இதனால் ஏழை மாட்டுவண்டி உரிமையாளர்கள் மிகவும் பாதிப்பு அடைந்துள்ளனர். இது குறித்து பலமுறை மனு செய்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அரசு விற்பனை நிலையங்களிலிருந்து மணல் எடுப்பதற்கு மாட்டு வண்டிகளுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் புகழேந்தி ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மணல் எடுக்கும் ஏழை மாட்டுவண்டி உரிமையாளர்கள் மிகவும் பாதிப்படைந்த உள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது.

அரசுத் தரப்பு வழக்கறிஞர், "கரூர் காவிரி ஆற்றுப் பகுதியில் ஐந்து இடங்களில் புதிய மணல் குவாரிகள் அமைத்து அதில் இரண்டு இடங்களில் லாரிகள் பயன்படுத்துவது, மூன்று இடங்களில் மாட்டுவண்டிகள் பயன்படுத்துவது குறித்து திட்ட வரைவு மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாவட்ட ஆட்சியரும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பி அனுமதிக்காக காத்திருப்பில் உள்ளது" எனக் கூறினார். அரசுத் தரப்பு விளக்கங்களைக் கேட்டு நீதிபதிகள் வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.