ETV Bharat / city

சுதந்திர தின விழா: மதுரையில் ரூ.56 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர் - Madurai collector Aneesh Segar

75ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, மதுரை மாவட்ட ஆட்சியர் தேசியக் கொடியை ஏற்றிவைத்து, 56 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர்
நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர்
author img

By

Published : Aug 15, 2021, 7:32 PM IST

மதுரை: நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுரை ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

பின்னர், காவல் துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு 35 காவலர்களுக்கு தமிழ்நாடு அரசின் பதக்கங்களை வழங்கினார்.

இதேபோல் கரோனா தடுப்பு காலங்களில் சிறப்பாகப் பணியாற்றிய சுகாதாரத்துறை, காவல் துறை, மருத்துவத் துறை உள்ளிட்ட முன்களப்பணியாளர்கள் 215 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

நலத்திட்ட உதவிகள்

தொடர்ந்து 56 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள சமூகப் பாதுகாப்புத் திட்டம், ஓய்வூதியம், வேளாண் கருவிகள் உள்ளிட்டப் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன், மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா உள்ளிட்ட காவல் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: சுதந்திரப் போராட்ட வரலாற்றை காட்சிப்படுத்திய தமிழ் படங்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.