மதுரை: திருவேங்கடம் கிராமத்தைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி ஷோபனா. தான் கல்லூரி சேர்ந்து படிப்பதற்கு பண வசதியில்லாமல் ஏழ்மை நிலையில் இருப்பதாக தமிழ்நாடு முதலமைச்சருக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு கடிதம் எழுதியிருந்தார்.
படிக்க ஏற்பாடு
அந்த மாணவியின் கடிதத்தை பரிசீலித்த முதலமைச்சர், மாணவி ஷோபனாவிற்கு மதுரை, ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரியில் பி.பி.ஏ பட்டப்படிப்பு பயில ஏற்பாடு செய்தார். தாயுள்ளத்துடன் உதவிய தமிழ்நாடு முதலமைச்சரை, சென்னையில் நேரில் வந்து சந்தித்து, நன்றி தெரிவிப்பதற்கு தன்னிடம் பணவசதி இல்லை என்று அம்மாணவி முதலமைச்சர் அவர்களுக்கு கடிதம் மூலம் தெரிவித்திருந்தார்.
விருந்தினர் மாளிகையில் மாணவி
இதற்கிடையே, பல்வேறு அரசு திட்டப் பணிகளின் ஆய்வுப் பணிக்காக மு.க.ஸ்டாலின், இன்று மதுரைக்கு வருகை தந்த போது, அரசு வாகனத்தை திருவேங்கடம் கிராமத்திற்கு அனுப்பி வைத்தார். மாணவி ஷோபனா மற்றும் அவரது பெற்றோரை, மதுரை அரசு விருந்தினர் மாளிகைக்கு வரவழைத்து, அம்மாணவிக்கு பட்டப் படிப்பிற்கான புத்தகங்கள், புத்தகைப்பை, கல்வி உபகரணங்கள் மற்றும் நிதியுதவி வழங்கி வாழ்த்தினார்.
இதையும் படிங்க: இலங்கை தமிழர் மறுவாழ்வு குடியிருப்புகள் திட்டத்திற்கு அடிக்கல் - நவ.3, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூர் பயணம்