மதுரை வண்டியூர் பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மை பணியாளராக வேலை வந்தார். இவர் நேற்று முன்தினம் (பிப்.16) பணி முடிந்து இரவு வீட்டுக்குச் செல்லாமல், ஆட்சியர் அலுவலகத்தின் இரண்டாம் தளத்தில் உள்ள மொட்டை மாடியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்நிலையில், வழக்கம்போல் நேற்று (பிப்.17) காலை பணிக்கு வந்த சக தூய்மைப் பணியாளர்கள், மொட்டை மாடிக்குச் சென்ற போது அங்கு வேல்முருகன் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து தல்லாகுளம் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர் உதவியுடன் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு ராசாசி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதையும் படிங்க: சுதந்திர இந்தியாவில் தூக்கு மேடைக்கு ஏற காத்திருக்கும் முதல் பெண்!