இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவில், “மணப்பாறை அருகே பச்சை மலை மற்றும் பெரிய மலை என்ற பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதிகளுக்கு இடையே மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இதனால் வனப்பகுதியில் உள்ள விலங்குகள் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்வதால், வாகனங்கள் மோதி விபத்து ஏற்படுகிறது. இதனால் விலங்குகள் மற்றும் மனிதர்கள் உயிரிழக்கும் சூழல் ஏற்படுகிறது.
இதையடுத்து பச்சை மலை மற்றும் பெரிய மலை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு இடையே தேசிய நெடுஞ்சாலையின், மூன்று இடங்களில் வனவிலங்குகள் சாலையைக் கடப்பதற்கு சுரங்க வழிப்பாதை அமைக்கக்கோரி தேசிய நெடுஞ்சாலை துறையினருக்கு கோரிக்கை வைத்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே அப்பகுதியில் சுரங்கப்பதை அமைக்க உத்தரவிடவும், இதேபோன்று தமிழகமெங்கும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் ரயில் தண்டவாளங்கள் உள்ள பகுதிகளில் விலங்குகள் கடப்பதற்கு உரிய வழிவகை செய்ய உத்தரவிட வேண்டும்” எனக் கோரப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 24 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: சனத்குமார் ஆறு ஆக்கிரமிப்பு! - நடவடிக்கை எடுக்க ஆட்சியருக்கு ஆணை!