ETV Bharat / city

மருத்துவர் இல்லாமல் செவிலியர்கள் சிகிச்சை அளித்ததால் தாய், குழந்தை மரணம்: நஷ்ட ஈடு கேட்டு வழக்கு

author img

By

Published : Mar 30, 2022, 8:22 AM IST

மருத்துவர் இல்லாமல் செவிலியர்கள் சிகிச்சை அளித்ததால் மகள், பேத்தி இறந்ததாகவும், ரூ.50 லட்சம் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில், சுகாதாரத்துறை முதன்மை செயலர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது .

மருத்துவர் இல்லாமல் செவிலியர்கள் சிகிச்சை அளித்ததால் தாய், குழந்தை மரணம்: ரூ.50 லட்சம் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு case-seeking-rs-50-lakh-compensation-for-death-of-daughter-and-her-child-due-to-treatment-by-nurses-without-doctor

மதுரை: தூத்துக்குடி மாவட்டம் கீழபாறைபட்டியைச் சேர்ந்த முருகம்மாள் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், "எனது மகள் கவிதாவிற்கும் தஞ்சாவூர், சூலமங்கலத்தைச் சேர்ந்த ராம்கி என்பவருக்கும் கடந்த 22-02-2021 அன்று திருமணம் நடைபெற்றது. பின் பிரசவத்திற்காக எனது மகளை எங்கள் ஊருக்கு அழைத்து வந்து கவனித்து வந்தேன்.

இந்நிலையில் கடந்த 12.02.2022 அன்று அதிகாலை 5 மணியளவில் எனது மகள் கவிதாவிற்கு பிரசவவலி ஏற்பட்டதால் கடம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தேன். 12.02.2022 அன்று காலை 10 மணியளவில் எனது மகளை பரிசோதித்த மருத்துவர் எனது மகள் நல்ல நிலையில் உள்ளார். சுகப்பிரசவம் நடைபெறும், இங்கு எல்லா வசதியும் உள்ளது என்றும் கூறினார்கள்.

இந்நிலையில் 13.02.2022 அதிகாலை 2 மணியளவில் எனது மகளுக்குப் பிரசவவலி ஏற்பட்டதால் பணியிலிருந்த செவிலியர் "டாக்டா வருவார், நீங்கள் எதற்கும் பயப்பட வேண்டாம்" என்றும் கூறிவிட்டுக் கத்தி மற்றும் சில மருத்துவ உபகரணங்களுடன் பெண் உதவியாளருடன் எனது மகளைப் பிரசவ அறைக்கு உள்ளே அழைத்துச் சென்றார்கள்.

சிறிது நேரத்தில் எனது மகளுக்கு ஆண் குழந்தை இறந்து பிறந்தது என கூறினார்கள். அதனைத் தொடர்ந்து எனது மகளின் உடல்நிலை மோசமாகவும் இரத்தபோக்கு நிற்காமல் தொடர்ந்து வந்ததாலும் ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு எனது மகள் இறந்து விட்டார் என மருத்துவர்கள் தெரிவித்தார்கள்.

இது தொடர்பாக அதிகாரிகளுக்கு புகார் அனுப்பினேன். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மருத்துவர் இல்லாமல் செவிலியர்கள் கொண்டு சிகிச்சை அளித்ததால் எனது மகள் மற்றும் அவரது குழந்தை இறந்துள்ளனர். எனவே, இதற்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு, ரூ.50 லட்சம் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.

ரூ.50 லட்சம் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு
ரூ.50 லட்சம் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு

இந்த மனு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு நேற்று (மார்ச்.29) விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு குறித்து சுகாதாரத்துறை முதன்மை செயலர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், கடம்பூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் மருத்துவர் செவிலியர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஏப்ரல் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக நிதி திரட்டிய வழக்கு: என்ஐஏ குற்றப்பத்திரிக்கை தாக்கல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.