ETV Bharat / city

நீர்நிலைப் பகுதியில் பட்டாக்களை ரத்துசெய்யக் கோரி வழக்கு: நடவடிக்கை எடுக்க உத்தரவு

மதுரை: நிலையூர் கண்மாய் நீர்நிலைப் பகுதியில் வழங்கிய பட்டாக்களை ரத்துசெய்து கண்மாயினை பழைய நிலைக்கு மாற்றக் கோரிய வழக்கில், மதுரை மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

நீர்நிலை பகுதியில் பட்டாக்களை ரத்து செய்யக் கோரி வழக்கு: மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க உத்தரவு

author img

By

Published : Jul 13, 2021, 6:24 PM IST

மதுரையைச் சேர்ந்த முத்துராமன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல்செய்த மனுவில், "மதுரை, நிலையூர் பெரிய கண்மாய் மூலம் 3,700 ஏக்கர் விவசாய நிலம் பயனடைந்துவருகின்றது.

இந்தக் கண்மாய் சுமார் இரண்டு லட்சம் மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக இருந்துவருகின்றது. கண்மாயில் சில தனியார் நிறுவனங்கள் ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டியுள்ளனர். இவர்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் முறைகேடான செயலாகும்.

இதுபோன்று நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டடம் கட்டியுள்ள தனியார் நிறுவனங்களுக்கு பட்டா வழங்கிவருகின்றனர்.

இது தொடர்பாக உயர் அலுவலர்களுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, நிலையூர் கண்மாயில் ஆக்கிரமிப்பு செய்து கட்டடங்கள் கட்டியுள்ள தனியார் நிறுவனங்களுக்கு அளித்த பட்டாவை ரத்துசெய்து கண்மாயினை பழைய நிலைக்கு மாற்ற உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், நீர்நிலையில் உள்ள இடங்களுக்கு பத்திரங்கள் எவ்வாறு தயார் செய்யப்பட்டன, நீர்நிலையிலுள்ள இடங்கள் எவ்வாறு விற்கப்பட்டன எனக் கேள்வி எழுப்பினர்.

மேலும், சென்னையில் உள்ள மதுரை, நிலையூர் கண்மாய் தொடர்பான வழக்கு ஆவணங்களை வரவழைத்து, மதுரை மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.